Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 2 மார்ச் 2026: மாசி மகம்

பெருவயல், திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமான் ரதோற்சவம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு.
Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 2 மார்ச் 2026: மாசி மகம்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு மாசி-18 (திங்கட்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : சதுர்த்தசி இரவு 6.28 மணி வரை பிறகு பவுர்ணமி

நட்சத்திரம் : ஆயில்யம் காலை 8.16 மணி வரை பிறகு மகம்

யோகம் : சித்த, மரணயோகம்

ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

இன்று மாசி மகம், சிவன் கோவில்களில் நடராஜருக்கு சோமவார அபிஷேகம்

இன்று மாசி மகம். நடராஜருக்கு அபிஷேகம். கோயம்புத்தூர் ஸ்ரீ கோணியம்மன் வெள்ளி யானை வாகனத்தில் பவனி. திருமாவிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கஜேந்திர மோட்சம். பெருவயல், திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமான் ரதோற்சவம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சன சேவை. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு.

கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம். திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-வரவு

ரிஷபம்-பயிற்சி

மிதுனம்-முயற்சி

கடகம்-ஆதரவு

சிம்மம்-வெற்றி

கன்னி-மேன்மை

துலாம்- நன்மை

விருச்சிகம்-அன்பு

தனுசு- தெளிவு

மகரம்-சிந்தனை

கும்பம்-நேர்மை

மீனம்-பணிவு 

X

Maalai Malar
www.maalaimalar.com