Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 18 நவம்பர் 2025: மாத சிவராத்திரி

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. குரங்கணி ஸ்ரீ முத்து மாலையம்மனுக்கு அபிஷேகம்.
Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 18 நவம்பர் 2025:  மாத சிவராத்திரி
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு கார்த்திகை-2 (செவ்வாய்க்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : திரயோதசி காலை 8.31 மணி வரை பிறகு சதுர்த்தசி

நட்சத்திரம் : சித்திரை காலை 6.59 மணி வரை பிறகு சுவாதி

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் அபிஷேகம்

இன்று மாத சிவராத்திரி. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை ஊஞ்சலில் காட்சி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம். குரங்கணி ஸ்ரீ முத்து மாலையம்மனுக்கு அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-ஆதரவு

ரிஷபம்-திடம்

மிதுனம்-வெற்றி

கடகம்-பக்தி

சிம்மம்-நன்மை

கன்னி-விருத்தி

துலாம்- செலவு

விருச்சிகம்-அமைதி

தனுசு- பண்பு

மகரம்-வரவு

கும்பம்-பெருமை

மீனம்-உயர்வு

X

Maalai Malar
www.maalaimalar.com