என் மலர்tooltip icon

    வழிபாடு

    Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 18 ஜனவரி 2026: தை அமாவாசை
    X

    Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 18 ஜனவரி 2026: தை அமாவாசை

    • திருமொச்சியூர், சூரிய நயினார் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் புறப்பாடு.
    • காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீமாரியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு தை-4 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : அமாவாசை பின்னிரவு 2.30 மணி வரை பிறகு பிரதமை

    நட்சத்திரம் : பூராடம் காலை 11.31 மணி வரை பிறகு உத்திராடம்

    யோகம் : சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று தை அமாவாசை, காஞ்சி காமாட்சியம்மன் உள்பட அம்மன் கோவில்களில் அபிஷேகம்

    இன்று சர்வ தை அமாவாசை. திருமொச்சியூர், சூரிய நயினார் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் புறப்பாடு. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர், சங்கரன் கோவில் ஸ்ரீ சங்கரலிங்கப் பெருமாள் கோவில்களில் லட்ச தீபக்காட்சி. ராமேசுவரம், வேதாரண்யம், திலகைப்பதி, திருவெண்காடு, திருவள்ளூர் கோவில்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய நன்று. திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவுரிராஜப் பெருமாள் ஸ்ரீ விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.

    சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம். காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீமாரியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உற்சாகம்

    ரிஷபம்-கடமை

    மிதுனம்-நற்செயல்

    கடகம்-சுகம்

    சிம்மம்-புகழ்

    கன்னி-நன்மை

    துலாம்- விவேகம்

    விருச்சிகம்-மகிழ்ச்சி

    தனுசு- தனம்

    மகரம்-வெற்றி

    கும்பம்-பாராட்டு

    மீனம்-ஆர்வம்

    Next Story
    ×