

இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-6 (புதன்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : பிரதமை மாலை 6.06 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம் : சதயம் இரவு 10.23 மணி வரை பிறகு பூரட்டாதி
யோகம் : சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை
இன்று சந்திர தரிசனம். கோடசெங்கட் சோழ நாயனார் குரு பூஜை. வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் பவனி. நத்தம் ஸ்ரீ மாரியம்மன் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் பெருமாள் புறப்பாடு.
விருதுநகர் விஸ்வநாதர் வேதாரண்யம் திருமறைக்காடர் கோவிலில் காலையில் அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீபுளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை. கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகர் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியபெருமாள் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மகிழ்ச்சி
ரிஷபம்-வெற்றி
மிதுனம்-உயர்வு
கடகம்-செலவு
சிம்மம்-ஆதரவு
கன்னி-அன்பு
துலாம்- ஊக்கம்
விருச்சிகம்-நலம்
தனுசு- மகிழ்ச்சி
மகரம்-முயற்சி
கும்பம்-ஆக்கம்
மீனம்-சிந்தனை