Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 15 ஜனவரி 2026: தைப்பொங்கல்

சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி குருவார சிறப்பு அலங்கார திருமஞ்சன சேவை.
Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 15 ஜனவரி 2026: தைப்பொங்கல்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு தை-1 (வியாழக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : துவாதசி இரவு 9.45 மணி வரை பிறகு திரயோதசி

நட்சத்திரம் : கேட்டை (முழுவதும்)

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

இன்று தைப்பொங்கல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஸ்ரீராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை

இன்று உத்திராயண புண்ணிய காலம். தைப்பொங்கல். பொங்கல் பானை வைக்க உகந்த நேரம்- காலை 7.30 மணி முதல் 8.15 வரை, 9 மணி முதல் 10 மணி வரை, 10.30 மணி முதல் 11.30 மணி வரை.

சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவில் கல்யானைக்கு கரும்பு கொடுத்தருளிய காட்சி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சன சேவை. ஆலங்குடி ஸ்ரீ குரு பகவானுக்கு கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி குருவார சிறப்பு அலங்கார திருமஞ்சன சேவை.

குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-அனுகூலம்

ரிஷபம்-இன்பம்

மிதுனம்-சாந்தம்

கடகம்-சிந்தனை

சிம்மம்-பாராட்டு

கன்னி-ஆக்கம்

துலாம்- மகிழ்ச்சி

விருச்சிகம்-கவனம்

தனுசு- நற்செயல்

மகரம்-உவகை

கும்பம்-மகிழ்ச்சி

மீனம்-உயர்வு

X

Maalai Malar
www.maalaimalar.com