என் மலர்
வழிபாடு

Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 1 ஜனவரி 2026: குருபகவானுக்கு திருமஞ்சன சேவை
- சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மார்கழி-17 (வியாழக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : திரயோதசி இரவு 8.57 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம் : ரோகிணி இரவு 9.48 மணி வரை பிறகு மிருகசீரிஷம்
யோகம் : மரணயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சிவன் கோவில்களில் இன்று சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி
இன்று பிரதோஷம். திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேதஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர், திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி கோவில்களில் மாலை சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். பெருஞ்சேரி ஸ்ரீ வர்கீஸ்வரர் புறப்பாடு சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திரரத வல்லப் பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சன சேவை.
ஆலங்குடி ஸ்ரீ குரு பகவான் கொண்டைக்கடலை சாற்று வைபவம். குறுக்குத்துறை முருகப் பெருமானுக்கும் தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீசவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பாலாபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உற்சாகம்
ரிஷபம்-பொறுப்பு
மிதுனம்-மேன்மை
கடகம்-தாமதம்
சிம்மம்-தெளிவு
கன்னி-உறுதி
துலாம்- நிறைவு
விருச்சிகம்-உண்மை
தனுசு- புத்துணர்ச்சி
மகரம்-கவனம்
கும்பம்-கடமை
மீனம்-பயிற்சி






