என் மலர்
வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 17 ஆகஸ்ட் 2025: காஞ்சி காமாட்சியம்மனுக்கு பால் அபிஷேகம்
- சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை.
- ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆவணி-1 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : நவமி இரவு 8.47 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம் : கார்த்திகை காலை 6.48 மணி வரை பிறகு ரோகிணி நாளை விடியற்காலை 4.28 மணி வரை பிறகு மிருகசீரிஷம்
யோகம் : சித்த, அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
காஞ்சி காமாட்சியம்மன், இருக்கன்குடி மாரியம்மன், சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம்
சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் தெப்ப உற்சவம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கு காலை சிறப்பு அபிஷேகம். காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வரவு
ரிஷபம்-மாற்றம்
மிதுனம்-லாபம்
கடகம்-வெற்றி
சிம்மம்-நலம்
கன்னி-நன்மை
துலாம்- ஆதாயம்
விருச்சிகம்-வரவு
தனுசு- உறுதி
மகரம்-இன்பம்
கும்பம்-மேன்மை
மீனம்-நிறைவு






