என் மலர்tooltip icon

    வழிபாடு

    மாசி மாத பொது பலன்கள்
    X

    மாசி மாத பொது பலன்கள்

    • ஒவ்வொரு திதிக்கும் சில குறிப்பிட்ட குறைபாடுகளை நீக்கும் சக்தி உண்டு.
    • வாழ்வில் செல்வம், வெற்றி ஆகியவற்றை பெற விரும்புவோர் அவசியம் சிவராத்திரி விரதம் இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும் ஒவ்வொரு விதமான சிறப்புகள் உண்டு. அந்த வகையில் மாசி மாதத்தில் சிவராத்திரியும் மாசி மகமும் சிறப்பித்து சொல்லக்கூடிய பண்டிகைகள் ஆகும்.

    மகா சிவராத்திரி

    மாசி 3 (15.2.2026) ஞாயிறு

    ஒவ்வொரு திதிக்கும் சில குறிப்பிட்ட குறைபாடுகளை நீக்கும் சக்தி உண்டு. அந்த வகையில் அமாவாசை மற்றும் பெளர்ணமிக்கு முந்தைய நாள் வரக்கூடியது சதுர்த்தசி திதி. இதில் அமாவாசைக்கு முந்தைய நாள் வரக்கூடிய சதுர்த்தசி திதிக்கு பாவங்களையும் தோஷங்களையும் நீக்கும் வலிமை உண்டு. மனிதர்களின் கர்ம தோஷங்களை நீக்கும் மகா சிவராத்திரி சதுர்த்தசி திதியில் மட்டுமே சம்பவிக்கும்.

    ஒரு ஜாதகத்தில் உள்ள கர்மபலன்களை உணர்த்தும் கிரகமான சனி பகவானுக்கு உதவியாக செயல்படுபவர்கள் ராகு/கேதுக்கள். சிவராத்திரி விரதம் இருந்து சிவ வழிபாடு செய்பவர்களுக்கு சனி, ராகு கேதுவால் ஏற்படும் பாதிப்புகள் அகலும்.மகா சிவராத்திரியன்று விரதம் இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுடன் சொர்க்கலோக பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வாழ்வில் செல்வம், வெற்றி ஆகியவற்றை பெற விரும்புவோர் அவசியம் சிவராத்திரி விரதம் இருக்க வேண்டும்.

    மாசி மகம்

    மாசி18(2.3.2026) திங்கள்

    2.3.2026 அன்று காலை 8.16 முதல் 3.3.2026 அன்று காலை 8.07 வரை மகம் நட்சத்திரம் உள்ளது. இது பெண்களுக்கான விரத நாள் சூரியனின் அதிதேவதை பரமேஸ்வரன். சந்திரனின் அதிதேவதை பார்வதிதேவி.

    ஆண் கிரக ராசியில் வரும் பெண் கிரகமான சந்திரன். பெண் கிரக ராசியில் வரும் ஆண் கிரகமான சூரியன்.இது தான் மாசி மக பவுர்ணமி நாளின் சிறப்பு அம்சம்.

    எனவே இந்த நாட்களில் சிவனுக்குள் சக்தி ஐக்கியம், சக்திக்குள் சிவன் ஐக்கியம்.சிவ சக்தி ஐக்யஸ்வரூபத்தை வணங்க இருவரின் அருளும் ஒருங்கே கிடைக்கும்.இந்த நாளில் பார்வதி பரமேஸ்வரரை வழிபட திருமணத் தடை நீங்கும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள். தம்பதியின் ஒற்றுமை பெருகும். குடும்பத்தில் இன்பம் பெருகும்.

    மாசி மாத கிரக நிலவரம்

    (திருக்கணித பஞ்சாங்கப் படி ) சூரியன் 13.2.2026 அன்று அதிகாலை 4.09 க்கு கும்ப ராசிக்கு செல்கிறார்.

    விசுவாவசு தமிழ் வருடத்தின் மாசி மாதம் பிறக்கிறது.

    செவ்வாய் மாசி 11 ( 23.2.2026 ) திங்கட்கிழமை செவ்வாய் பகவான் கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

    புதன் மாசி 14 ( 26.2.2026) வியாழக்கிழமை கும்ப ராசியில் வக்கிரம் அடைகிறார்.

    சுக்ரன் மாசி 17 (2.3.2026) ஞாயிற்றுக் கிழமை மீன ராசியில் உச்சம் அடைகிறார்.

    மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் மாசி 26 (11.3.2026) செவ்வாய்க்கிழமை அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார்.

    சனி பகவான் மீன ராசியில் சஞ்சரிக்கிறார்.

    ராகு பகவான் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார்.

    கேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார்.

    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

    Next Story
    ×