என் மலர்
வழிபாடு

சந்திர கிரகணம்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 7-ந்தேதி மதியம் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதி
- மாலை 5 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.
- மறுநாள் 8-ந்தேதி வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
வருகிற 7-ந்தேதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அதனால் அன்றைய தினம் திருச்செந்தூர் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 2 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 3 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடைபெறுகிறது.
மாலை 5 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. அதனால் அன்றைய தினம் கட்டண தரிசனம், முதியோர் தரிசனம், பொது தரிசனம் ஆகியவை மதியம் 2 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மறுநாள் 8-ந்தேதி வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Next Story






