என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    • தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் “108 சிவாலயம்” என்றழைக்கப்படும் ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது.
    • சாபம், பாவம் மற்றும் தோஷங்களை நீக்கவல்ல இத்தலத்தில் ராமபிரான் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க பூஜை செய்தார்.

    தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் "108 சிவாலயம்" என்றழைக்கப்படும் ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது.

    சாபம், பாவம் மற்றும் தோஷங்களை நீக்கவல்ல இத்தலத்தில் ராமபிரான் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க பூஜை செய்தார்.

    அப்போது சீதாதேவி 106 சிவலிங்கங்களை உருவாக்கினார். 107வது லிங்கமாக ராமலிங்க சுவாமி காட்சி கொடுத்தார்.

    இதற்கிடையே காசியில் இருந்து அனுமன் கொண்டு வந்த லிங்கம் "அனுமந்தலிங்கம்" என்ற பெயரில் 108வது லிங்கமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இத்தகைய சிறப்பு மிக்க பாபநாசம் தலத்தில் வருடம் தோறும் மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி, பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா நாளை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட உள்ளது.

    அன்றைய தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 108 சிவலிங்கங்களையும் 108 முறை வலம் வரும் நிகழ்ச்சியும் வெகு பக்திப்பரவசத்துடன் நடைபெறும்.

    மேலும் 108 சிவலிங்கங்களுக்கும் நான்கு பால பூஜையும் அபிஷேக ஆராதனைகளும் விமரிசையாக நடைபெற உள்ளன.

    இந்த ஆலயத்தை ஒரு முறை தரிசித்தால் 108 சிவாலயங்களை தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.

    • ஒருநாள் நம்பி, பெருமாளுக்கு ஆலவட்டம் விசிறிவிட்டு தமது இருப்பிடம் திரும்பினார்.
    • அப்போது சனீஸ்வரர் அவரைப் பிடித்துக் கொண்டார்.

    மகா யோகிகளையும், ஞானிகளையும் கூட சனி பகவான் ஆட்டிப்படைத்து விடுகிறார் என்பதற்கு ஒரு கதை சொல்வதுண்டு.

    வைஷ்ணவப் பெரியோர்களில் ஒருவர் திருக்கச்சி நம்பி இவர் ராமானுஜரின் ஆச்சார்யர்களில் ஒருவர்.

    இவருக்கும் காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கும் நெருக்கம் அதிகம்.

    இருவரும் பல விஷயங்கள் பற்றிப் பேசுவார்கள். இரவில் இவர் காஞ்சி பெருமாளுக்கு ஆலவட்டம் விசிறும் திருப்பணியை செய்வார்.

    இப்படிப்பட்ட நம்பியை ஏழரைச்சனி பிடிக்க வேண்டிய காலம் வந்தது. அவரிடம் சனிபகவான், "சுவாமி! தங்களைப் பிடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்கு தாங்கள் உத்தரவுதர வேண்டும்" என வணங்கி நின்றார்.

    அதற்கு நம்பி, "பகவானே! தாங்கள் என்னைப்பிடிப்பதால் ஏற்படும் தன்பங்களை நான் தாங்கிக்கொள்கிறேன்.

    ஆனால், அந்தக் காலகட்டத்தில் நான் பெருமாளுக்குச் செய்யக்கூடிய கைங்கரியத்திற்கு இடைஞ்சல் வந்துவிடுமே? எனவே, ஏழரை ஆண்டு என்பதைக் கொஞ்சம் குறைந்துக்கொள்ளக்கூடாதா?" என்றார்.

    அதற்கு சனீஸ்வரர், "ஏழரை மாதங்கள் பிடித்துக் கொள்ளட்டுமா?" என்றார்.

    நம்பியோ, "பெருமாளுக்கு சேவை செய்யாமல் ஒரு நொடிகூட இருக்க முடியாத எனக்கு ஏழரை மாதம் அதிகம்" என்றார். "சரி, ஏழரை நாள் பிடித்துக்கொள்ளட்டுமா?"

    "அதெல்லாம் கூடாது" என்றார் நம்பி.

    "அப்போ ஏழரை நாளிகை (3 மணி நேரம்) என்ற சனீஸ்வரரிடம் சரி என்றார் நம்பி.

    ஒருநாள் நம்பி, பெருமாளுக்கு ஆலவட்டம் விசிறிவிட்டு தமது இருப்பிடம் திரும்பினார்.

    அப்போது சனீஸ்வரர் அவரைப் பிடித்துக் கொண்டார். ஆரம்பித்து விட்டது ஏழரை அந்த நேரத்தில் கோவில் கருவறையில் திருவாராதனம் செய்ய ஆரம்பித்தார்.

    ஒரு அர்ச்சகர் நைவேத்தியம் வைக்கும் தங்கக் கிண்ணத்தைக் காணவில்லை. யார் எடுத்திருப்பார்கள் யோசித்து யோசித்துப் பார்த்தார்.

    கடைசியாக அர்ச்சகருக்கு ஞாபகம் வந்தது. கடைசியாக பெருமாளுக்கு கைங்கரியம் செய்துவிட்டுப் போனது திருக்கச்சி நம்பி. அவரோ மாபெரும் மகான்.

    அவரா இந்தத் தட்டை எடுத்திருப்பார். ஒரே குழப்பம். இருந்தாலும் சந்தேகம் மட்டும் தீரவில்லை.

    கோவில் அதிகாரிக்கு அர்ச்சகர் தகவல் தந்துவிட்டார். ஊழியர்கள் கோவில் முழுவதும் தேடினார்கள். ஆனாலும், கிடைக்கவில்லை.

    கடைசியில் நம்பிக்கு ஆள் அனுப்பி வரவழைத்து விசாரிப்பது என்ற முடிவுக்கு வந்தார்கள்.

    நம்பி வரவழைக்கப்பட்டார். கிண்ணம் என்னாயிற்று? கேள்விக்கணைகள் பாய்ந்தன. நெருப்பில் விழுந்த புழுவாய்த்துடித்தார் நம்பிகள்.

    "பெருமானே! உனக்கு நான் செய்த பணிக்கு திருட்டுப்பட்டமா கட்டப்பார்க்கிறாய்? எப்போதும் என்னிடம் பேசுவாயே! இப்போது பேசு. எல்லார் மன்னிலையிலும் பேசு" என்றார்.

    பெருமாள் அமைதியா இருந்துவிட்டார்.

    நம்பி அவரிடம், "எல்லாம் உன் செயல். நீ என்ன விரும்புறாயோ அப்படியே நடக்கட்டும்" எனச் சொல்லி தண்டனை பெறுவதற்காக அரசவைக்கு காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டார்.

    அப்போது ஏழரை நாளிகை கடந்துவிட்டது. அர்ச்சகர்கள் ஓடி வந்தனர்.

    "சுவாமி! கிண்ணம் கிடைத்துவிட்டது. சுவாமியின் பீடத்திற்குக் கீழே கிண்ணம் மறைந்திருந்தது. அறியாமல் நடந்த தவறுக்கு மன்னியுங்கள்" என்றார்.

    சனீஸ்வரனும் இறைத்தொண்டு செய்த நம்பியிடம் நடந்ததை விளக்கி மன்னிப்புக் கேட்டு விலகிக் கொண்டார்.

    • கடைசியாக முனிவர் ஒருவரின் உதவியினால் கண்டு பிடித்தான்.
    • கேட்டால் தர மறுத்துவிடுவானோ என்ற காரணத்தினால் தான் மலர்களைக் கவர்ந்து வரச் சொன்னதாக இந்திரன் பதில் கூறினார்.

    புராண காலத்தில் "ருக்மாங்கதன்" என்ற பெயருடைய மன்னன் செங்கோல் தவறாது ஆட்சி செய்து வந்தான்.

    அவன் மலர்களின் மீது மிகுந்த ஆசை கொண்டவன்.

    அவனுக்குச் சொந்தமான ஒரு அழகிய நந்தவனத்தில் உலகில் உள்ள பேரழகு வாய்ந்த மலர்களை எல்லாம் வரவழைத்து அங்கே பயிர் செய்தான்.

    அதை தன் கண் போல் காத்து வளர்த்து வந்தான்.

    ஒரு சமயம், தேவேந்திரன் தனக்கு ஒரு யாகத்திற்கு பூசை செய்ய பூக்கள் வேண்டுமென்று கருதிய போது ருக்மாங்கதனின் பூந்தோட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு தேவ கண்ணரசனை அனுப்பி அங்கிருந்து வினோதமான பூக்களை திருடிக் கொண்டு வரச் செய்தான்.

    தினமும் பூக்கள் திருட்டுப் போவதைக் கண்ட ருக்மாங்கதன் திருடர்களைக் கண்டு பிடிக்க தீவிரமான முயற்சிகளைச் செய்தார்.

    ஆனால் அவரால் திருடர்களை கண்டுபிடிக்க இயலவில்லை.

    கடைசியாக முனிவர் ஒருவரின் உதவியினால் கண்டு பிடித்தான்.

    கேட்டால் தர மறுத்துவிடுவானோ என்ற காரணத்தினால் தான் மலர்களைக் கவர்ந்து வரச் சொன்னதாக இந்திரன் பதில் கூறினார்.

    அதன் பிறகே ருக்மாங்கதன் சமரசம் அடைந்தார்.

    • சிவலிங்கத்தின் மேல் பூவோ, வில்வமோ இல்லாமல் இருக்கக் கூடாது.
    • பூக்களை ஒரு போதும் கவிழ்த்து சார்த்தக் கூடாது.

    வழிபாடுக்கு உதவும் பூக்கள் பற்றிய தகவல்கள்:

    1. சந்தனமும், பூவும் இல்லாத பூஜை பயனற்றது.

    2. சிவலிங்கத்தின் மேல் பூவோ, வில்வமோ இல்லாமல் இருக்கக் கூடாது.

    3. பூக்களை ஒரு போதும் கவிழ்த்து சார்த்தக் கூடாது.

    4.முந்தைய நாள் போட்ட புஷ்பத்தின் மீது புது புஷ்பம் சார்த்தக் கூடாது. அதைக் காலில் படாத நிலையில் களைந்த பிறகே புஷ்பம் சார்த்த வேண்டும்.

    5. தாழம்பூவில் நுனியில் லட்சுமியும், மத்தியில் சரஸ்வதியும், காம்பில் மூதேவியும் உறைவதால் காம்பினை நீக்கியே பூஜையில் சமர்ப்பிக்க வேண்டும்.

    6. "அர்ஜூனா! யார் எனக்கு இலை, மலர், கனி, நீர் இவற்றைப் பக்தியோடு படைக்கிறாரோ அவரது தூய மனதைக் கருதி, அவர் அளிப்பவற்றை ஏற்றுக் கொள்கிறேன்" என்று பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்.

    7. துர்வாச முனிவரிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள திரவுபதி பரந்தாமனை அழைத்தாள். அப்போது அட்சய பாத்திரத்தில் இருந்த ஒரு சிறு இலையைத் திரவுபதி சமர்ப்பிக்க, அதை உண்டு அனைவரையும் கண்ணன் காத்தார்.

    8. கஜேந்திரன் தினமும் பரந்தாமனுக்குப் புஷ்பங்களைப் பக்தியுடன் சமர்ப்பித்து வந்ததால் முதலையின் வாயில் இருந்து மீள முடிந்தது.

    • நடுப்பகலில் வெண்தாமரை, அரளி, புரசு, துளசி, நெய்தல், வில்வம், சங்குபுஷ்பம், மருதாணி, கோவிதாரம், ஒரிதழ் ஆகியன நன்மை தரும்.
    • மாலையில் செந்தாமரை, அல்லி, மல்லிகை, ஜாதிமுல்லை, மரிக்கொழுந்து, வெட்டிவேர், கஜகர்ணிகை, துளசி, வில்வம் ஆகியவை உகந்தன.

    காலை நேரத்தில் தாமரை, பூவரசம்பூ, துளசி, நவமல்லிகை, நத்தியாவட்டை, மந்தாரை, முல்லை, செண்பகம், புன்னாகரம் (தாழை & இம்மலர் சிவவழிபாட்டில் பயன்படுத்தலாகாதது) ஆகிய பத்துவித மலர்களால் வழிபட வேண்டும்.

    நடுப்பகலில் வெண்தாமரை, அரளி, புரசு, துளசி, நெய்தல், வில்வம், சங்குபுஷ்பம், மருதாணி, கோவிதாரம், ஒரிதழ் ஆகியன நன்மை தரும்.

    மாலையில் செந்தாமரை, அல்லி, மல்லிகை, ஜாதிமுல்லை, மரிக்கொழுந்து, வெட்டிவேர், கஜகர்ணிகை, துளசி, வில்வம் ஆகியவை உகந்தன.

    அஷ்ட புஷ்பங்கள்:

    அறுகு, செண்பகம், புன்னாகரம், நத்தியாவட்டை, பாதிரி, பிருகதி, அரளி, தும்மை ஆகிய அஷ்ட புஷ்பங்கள் என்று அழைக்கப்படுகிறது.

    பூக்களை எத்தனை நாட்கள் வைத்து இருக்கலாம்?

    தாமரை ஐந்து நாட்களுக்குள்ளும், அரளி மூன்று நாட்களுக்குள்ளும், வில்வம் ஆறுமாதத்திற்குள்ளும், துளசி மூன்று மாதத்திற்குள்ளும், தாழம்பூ ஐந்து நாட்களுக்குள்ளும், நெய்தல் மூன்று நாட்களுக்குள்ளும், செண்பகம் ஒரே நாளுக்குள்ளும், விஷ்ணுகிரந்தி மூன்று நாட்களுக்குள்ளும், விளாமிச்சை எப்போதும் பயன்படுத்தலாம்.

    கையில் கொண்டு வந்தது, தானாக விழுந்தது, காய்ந்தது, முகர்ந்துப்பார்க்கப்பட்டது, அசுத்தமான இடம், பொருள்களில் வைக்கப்பட்டது ஆகியன பூஜைக்கு ஆகாதனவாம்.

    மலர்களைக் கிள்ளிச் சாத்தக்கூடாது (முழு மலராகவே சாத்த வேண்டும்). இலைகளைக் கிள்ளி சாத்தலாம்.

    வில்வம், துளசி முதலியவற்றைத் தளமாகச் சாத்த வேண்டும்.

    பூஜைக்குரிய இலைகள்:

    துளசி, முகிழ், சண்பகம், தாமரை, வில்வம், கல்ஹாரம், மரிக்கொழுந்து, மருதாணி, தர்ப்பம், அறுகு, அசிவல்லி, நாயுறுவி, விஷ்ணுகிரந்தி, நெல்லி முதலியவற்றின் இலைகள் பூஜைக்குரியவையாக கருதப்படுகிறது.

    பஞ்ச வில்வங்கள்:

    முல்லை, கிளுவை, நெச்சி, வில்வம், விளா ஆகியவை பஞ்ச வில்வமாக வரையறுக்கப்பட்டுள்ளது.

    • வேதங்கள் இல்லாததால் பிரம்மாவால் தன்னுடைய படைப்புத் தொழிலைத் தொடர முடியவில்லை.
    • பிரம்மா பகவானிடம் முறையிட்டார்.

    யுகங்கள் ஆரம்பிக்கும் முன்பாக ஸ்ரீமந் நாராயணனின் நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மா படைக்கப்பட்டார், லகங்களையும், உயிர்களையும் தோற்றுவிக்கவே இவர் படைக்கப்பட்டார்.

    அதன்படி வேதங்களின் உதவியுடன் தன் படைப்பு வேலையைச் செய்த வந்தார்.

    பிரம்மா நல்லவர்களையும், தீயவர்களையும் தோற்றுவித்தார், நல்ல குணம் உடைய தேவர்கள், தீய குண்ட கொண்ட அசுரர்களுக்குத் தொல்லையாகத் தோன்றினர்.

    எனவே பிரம்மா இனி தேவர்களைப் படைக்கக் கூடாது என்பதற்காக மது, கைடபர் என்ற இரண்டு அசுரர்கள் வேதங்களை பிரம்மாவிடம் இருந்து அபகரித்துச் சென்று விட்டனர்.

    வேதங்கள் இல்லாததால் பிரம்மாவால் தன்னுடைய படைப்புத் தொழிலைத் தொடர முடியவில்லை.

    பிரம்மா பகவானிடம் முறையிட்டார்.

    பகவான் விஷ்ணு, ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் ஸ்ரீஹயக்ரிவராக அவதாரம் செய்து வேதங்களை அசுரர்களிடம் இருந்து மீட்டு, பிரம்மாவிடம் கொடுத்து படைப்பு தொழிலை தொடரச் செய்தார்.

    சகலவல்லியான ஸ்ரீ சரஸ்வதி தேவிக்கு எல்லா வேதங்களையும், வித்தைகளையும், கல்விச் செல்வங்களையும் ஸ்ரீ ஹயக்ரிவரே அளித்து அருளினார்.

    கல்வியில் வெற்றி பெற மாணவ-மாணவிகள் ஸ்ரீ ஹயக்ரிவ பகவானை தினமும் வேண்டிக் கொண்டு சுவாமி தேசிகனின் கீழ்க்கண்ட துதியைச் சொல்லி வர வேண்டும்.

    "ஞாநாநந்த மயம் தேவம் நிர்மலஸ்படிகாக்ருதிம்

    ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரிவம் உபாஸ்மஹே"

    • நரசிம்ம அவதாரம்- செவ்வாய்
    • வாமன அவதாரம்- குரு

    1. ராமாவதாரம்-சூரியன்

    2. கிருஷ்ணாவதாரம்-சந்திரன்

    3. மச்சஅவதாரம்-கேது

    4. கூர்ம அவதாரம்-சனி

    5 வராக அவதாரம்-ராகு

    6. நரசிம்ம அவதாரம்-செவ்வாய்

    7. வாமன அவதாரம்-குரு

    8. பரசுராம அவதாரம்-சுக்கிரன்

    9. பலராம அவதாரம்-குளிகன்

    10. கல்கி அவதாரம்-புதன்

    • மதுரகவியாழ்வார் - குமுதம்
    • குலசேகர ஆழ்வார்- கௌஸ்துபம்

    பன்னிரண்டு ஆழ்வார்களும், ராமானுஜரும் திருமாலின் அம்சங்கள்.

    திருமாலின் அம்சமாக பன்னிரண்டு ஆழ்வார்களும், ராமானுஜரும் தோன்றினார்கள்.

    அதன் விபரம்:

    1. பொய்கையாழ்வார்-சங்கு (பாஞ்சசன்யம்)

    2. பூதத்தாழ்வார்-கதை (கவுமோதகி)

    3. பேயாழ்வார்-வாள் (நந்தகம்)

    4. திருமழிசையாழ்வார்- சக்கரம் (சுதர்சனம்)

    5. நம்மாழ்வார்- விஷ்வக்சேனர்

    6. மதுரகவியாழ்வார்- குமுதம்

    7. குலசேகர ஆழ்வார்- கௌஸ்துபம்

    8. பெரியாழ்வார்- கருடன்

    9. ஆண்டாள்- பூமகள்

    10. தொண்டரடிப் பொடியாழ்வார் - வனமாலை

    11. திருப்பாணாழ்வார்- ஸ்ரீவத்ஸஜீம்

    12. திருமங்கையாழ்வார்- வில் (சார்ங்கம்)

    13. ராமானுஜர்- ஆதிசேஷன்

    • சிவம் என்ற சொல்லுக்கு “மங்களமானது” என்று பொருள்.
    • சிவன்முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நின்று ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களையும் போக்கி வீடுபேறு அருளுகிறார்.

    சிவம் என்ற சொல்லுக்கு "மங்களமானது" என்று பொருள்.

    சிவன்முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நின்று ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களையும் போக்கி வீடுபேறு அருளுகிறார்.

    சிவபெருமானை காலையில் தரிசிக்க - நோய்கள் நீங்கும். நண்பகலில் தரிசிக்க - தனம் பெருகும். மாலையில் தரிசிக்க - பாவம் அகலும். அர்த்த சாமத்தில் தரிசிக்க - வீடுபேறு கிடைக்கும்.

    படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் எனும் ஐந்தும் சிவனின் தொழில் எனப்படுகிறது.

    அருவம், உருவம், அருவுருவம் என்ற மூன்றுவகையான சிவ வழிபாட்டு முறையில் உருவ வழிபாடும் சைவர்களால் கடைபிடிக்கப்படுகிறது.

    சிவனை மூலமூர்த்தியாகக் கொண்டு இந்தியா, இலங்கை, நேபாளம் உட்பட பல நாடுகளில் கோவில்கள் பல உண்டு.

    ஜோதி லிங்கங்கள் உள்ள சிவத்தலங்கள், பஞ்சபூத சிவத்தலங்கள், ஐந்து தாண்டவங்களுக்கான சிவத்தலங்கள், ஐந்து மன்றங்களுக்கான சிவத்தலங்கள்,சப்த விடங்க சிவத்தலங்கள், முக்தி தரவல்ல சிவத்தலங்கள், தமிழகத்தின் நவ கைலாயங்கள் (சிவதலங்கள்), தேவாரப் பாடல் பெற்ற சிவதலங்கள், அட்டவீரட்டானக் கோவில்கள் என பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

    மகாசிவராத்திரி, யோகசிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ஷிய சிவராத்திரி, மாத சிவராத்திரி என ஐந்து வகைகளாக கொண்டாடப்படும் சிவராத்திரி திருவிழா சைவர்களின் முக்கிய விழாவாகும்.

    மாசி மாதத்தில் தேய்பிறை காலத்தில் வரும் சதுர்த்தசி நாளை மகா சிவராத்திரி என்று அழைக்கின்றார்கள்.

    • விபூதி மற்றும் பிரசாதத்தை பயபக்தியுடன் இரண்டு கைகளாலும் ஏந்திப் பெறவேண்டும்.
    • அதைக்கீழே சிந்துவதோ எறிவதோ பெரும்பாவமாகும்.

    சிவ விரதங்கள் எட்டு. அவற்றுள் சிவராத்திரி ஒன்று.

    அதிகாலையில் நீராடி திருநீறும் ருத்திராட்ச மாலையும் அணிந்து சிவபூஜை செய்து திரு ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதவேண்டும்.

    பகல் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். மாலையில் மீண்டும் நீராடி சிவாலயம் சென்று வழிபட வேண்டும்.

    முடியுமானால் நெய்விளக்கு ஏற்றி மலரால் அர்ச்சனை செய்து உள்ளம் உருகி தேவாரம் மற்றும் திருவாசக பாடல்களை பாடி துதி செய்து வலம் வந்து அஷ்டாங்க வணக்கம் புரிந்து வழிபாடு செய்ய வேண்டும்.

    சிவராத்திரி அன்று இரவில் நான்கு காலங்களிலும் சிவபூஜை செய்ய வேண்டும்.

    சிவபூஜை செய்ய இயலாதவர்கள் நான்கு காலங்களிலும் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் கலந்து கொண்டு தரிசிக்க வேண்டும்.

    நிரம்பிய அன்புடன் திரு ஐந்தெழுத்து ஓதுதல் இன்றியமையாதது.

    மறுநாள் காலை நீராடி சிவனை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

    இப்படி விரதம் இருந்தவர்களின் சகல வினைகளும் நெருப்பில் விழுந்த பஞ்சு போல எரிந்து கரிந்து சாம்பவாகும்.

    தீபங்களை வரிசையாக வைத்து சிவபெருமானை வழிபட வேண்டும்.

    சிவபெருமான் தீபமங்கள ஜோதியாக விளங்குபவர். அவர் ஒளிவெள்ளமாக திருவண்ணாமலையில் காட்சி தருகிறார்.

    கோவிலுக்குள் நீராடிய பிறகே செல்ல வேண்டும்.

    கொடி மரத்திற்கு வெளியே விழுந்து வணங்கி விநாயகரை ஒரு முறையும் சிவபெருமானை மூன்று முறையும், அம்பிகையை நான்கு முறையும் வலம் வரவேண்டும்.

    வழிபடும்போது மனம் இறைவன் மீது மட்டுமே இருக்க வேண்டும்.

    விபூதி மற்றும் பிரசாதத்தை பயபக்தியுடன் இரண்டு கைகளாலும் ஏந்திப் பெறவேண்டும்.

    அதைக்கீழே சிந்துவதோ எறிவதோ பெரும்பாவமாகும்.

    சண்டிகேஸ்வரர் மீது நூல் இடக்கூடாது. சிவலிங்கத்திற்கும் நந்திதேவருக்கும் இடையே போகக்கூடாது.

    கோவிலில் பிரசாதங்களை சாப்பிட்டு விட்டு தூண்களில் துடைப்பது தவறாகும்.

    வழிபாடு முடிந்த பிறகு கொடிமரத்தின் அருகில் வடதிசை நோக்கி அமர்ந்து மூலமந்திரம் ஜெபிக்க வேண்டும்.

    அதிக சப்தம் இல்லாமல் இனிமையாக தோத்திரப் பாடல்களை பாடவேண்டும். கோவிலுக்கு செல்வோர் முக்கியமாக விளக்குகளில் எண்ணைய் ஊற்ற வேண்டும்.

    இதனால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாவதுடன், அந்த வீட்டில் தெய்வ கடாட்சமும், லட்சுமியின் அனுகிரகமும் உண்டாகும்.

    • துலாம் ராசிக்காரர்கள் பசு மாட்டு பால் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.
    • கும்பம் ராசிக்காரர்கள் இளநீர் அல்லது கடுகு எண்ணை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

    மேஷம் ராசிக்காரர்கள் சிவராத்திரி அன்று வெல்லம் கலந்த நீரை கொண்டு சிவலிங்கத்திற்கு படைத்து சிவபஞ்சாட்சர மந்திரத்தை சொல்ல வேண்டும்.

    ரிஷபம் ராசிக்காரர்கள் தயிரை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

    மிதுனம் ராசிக்காரர்கள் கறும்பு சாறு கொண்டு அபிஷகம் செய்ய வேண்டும்.

    கடகம் ராசிக்காரர்கள் சர்க்கரை சேர்த்த பால் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.

    சிம்மம் ராசிக்காரர்கள் சிவப்பு சந்தனம் கலந்த பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

    கன்னி ராசிக்காரர்கள் வெறும் பால் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

    துலாம் ராசிக்காரர்கள் பசு மாட்டு பால் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

    விருச்சிகம் ராசிக்கார்கள் தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

    தனுசு ராசிக்காரர்கள் குங்குமப்பூ கலந்த பாலால் அபிஷேகம் செய்து பஞ்சாராட்ர மந்திரத்தை படித்தால் இன்னல்கள் நீங்கும்.

    மகரம் ராசிக்காரர்கள் நல்லெண்ணையால் அபிஷேகம் செய்து வில்வ பழத்தை படைத்து வழிபட வேண்டும்.

    கும்பம் ராசிக்காரர்கள் இளநீர் அல்லது கடுகு எண்ணை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

    மீனம் ராசிக்காரர்கள் குங்குமப்பூ கலந்த பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

    1.         லிங்கோத்பவர்-மோட்சப்பிரதாயினி-மோட்சம் சித்திக்கும்

    2.            திரிமூர்த்தி-வம்ச விருத்தி பிரதாயினி   -குழந்தைப்பேறு கிட்டும்

    3.            கல்யாண சுந்தரர் -    சர்வ மங்களா தேவி        -           திருமணப் பேறு கிடைக்கும்

    4.            சுகாசனர்          -                    தர்மசம்வர்த்தினி         -               நியாயமான ஆசைகள் நிறைவேறும்

    5.            கங்காதரர்      -              சர்வ பாவஹரணி            -            பாவங்கள் விலகும்

    6.            நடேசர்           -                சம்பத்யோக காரணி              -   மகப்பேறு கிட்டும்

    7.            சண்டேச அனுக்ரகர்- மகாபாதக நாசினி          -            கெட்ட எண்ணம் நீங்கும்

    8.            ரிஷபாரூடர்           -     தர்மசித்திப் பிரதாயினி     -       நல்ல முயற்சிகளில் வெற்றி கிட்டும்

    9.             நீலகண்டர்              -    விஷதோஷ் நிவர்த்தினி       -      விஷ ஜந்துக்களினால் ஏற்படும் ஆபத்து நீங்கும்

    10.ஹரிஹர மூர்த்தி- தர்மார்த்தாயினி -வழக்குகளில் வெல்லலாம்

    11.ஏகபாத மூர்த்தி- மகாரோக விநாசினி -தம்பதியினரிடையே ஒற்றுமை நிலவும்

    12.உமாசகாயர் -பார்யா சவுபாக்யப் பிரதாயினி -மனைவியின் உடல்நலம் சீராகும்

    13.அர்த்தநாரீஸ்வரர்- சவுபாக்ய பிரதாயினி-  தம்பதியினரிடையே ஒற்றுமை நிலவும்

    14.தட்சிணாமூர்த்தி- மேதாப்ரக்ஞ பிரதாயினி- கலை ஞானம், கல்வி ஞானம் வளரும்

    15.சோமாதி நாயகர்- சர்வ சித்தி -காரணிசகலமும் சித்தியாகும்

    16.சோமாஸ்கந்தர்- புத்ர சவுபாக்யபிரதாயினி -குழந்தைகள் ஆரோக்கியம் நிலைக்கும்

    17.சந்திர மவுலீஸ்வரர் -தனதான்ய பிரதாயினி -தனமும் தானியமும் சேரும்

    18.வீரபத்ரர்சத்ரு -வித்வேஷ் நாசினி -எதிரி பயம் நீங்கும்

    19.காலசம்ஹாரர்- சர்வாரிஷ்ட நாசினி-  மரண பயமும், அகால மரணமும் நேராது

    20.காமாந்தகர் -ரோக விக்ன நாசினி-  தடைகள் நீங்கும், ஞானம் சித்திக்கும்

    21.கஜசம்ஹாரர்- பராபிசார சமநீ -பிறர் செய்த தீவினையின் பாதிப்புகள் அகலும்

    22.திரிபுர சம்ஹாரர் -ஜன்ம ஜரா ம்ருத்யு விநாசினி -பிறவிப் பிணி தீரும், எம பயம் நேராது.

    23.பிட்சாடனர்- யோசித் பந்தவி மோஹினி-  மோகமாயை விலகும்

    24.ஜலந்தர- சம்ஹாரர்துஷ்ட விநாசினி -விரோதிகள் விலகுவர்

    25.சரப மூர்த்தி- அரிப்ரணாசினி-             மாயை, கன்மம் விலகும்

    26.பைரவர்                       -  ரஷாகரி -இறையருள் எப்போதும் காக்கும்

    ×