என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் விசாரணை நிறைவடைந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்வதற்கு இரு தரப்புக்கும் நாளை வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    தக்காளி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த நுகர்வோருக்கு பசுமை பண்ணை கூட்டுறவு மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    கூச் பெஹார் பகுதியில் இன்று காலை திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் 7 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டனர். குண்டு காயம் அடைந்த அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் பாபுஹக்கே என்பவர் இறந்தார்.

    ஆனி மாத பவுர்ணமி மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு வருகிற 1-ந்தேதி முதல் 4-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

    திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மம்தா பானர்ஜி வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, பெண் ஒருவர் நடத்தி வரும் டீக்கடைக்கு சென்ற முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அங்கிருந்த டீத்தூளை எடுத்து கிளாஸ்களில் டீ போட்டு பொது மக்களுக்கும், கட்சியினருக்கும் கொடுத்தார்.

    பயிர்களை பாதுகாப்பதற்காக விவசாயிகள் கரடி ஆடைகளை அணிந்து காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். குரங்குகளை பயமுறுத்துவதற்காக விவசாயிகள் கரடி உடை அணிந்து வயல்களுக்கு நடுவே அமர்ந்திருக்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

    போபாலில் உள்ள ராணி கம்லாபதி ரெயில் நிலையத்தில் இருந்து ஐந்து வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோவா- மும்பை, பாட்னா- ராஞ்சி, போபால்- இந்தூர், போபால்-ஜபல்பூர், பெங்களூரு-ஹூப்ளி ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கியுள்ளது.

    வாக்னர் படை ரஷியாவில் அந்நாட்டு ராணுவத்திற்கு எதிராக திரும்பியது. இதனால் ஆயுத கிளர்ச்சி ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், ஒப்பந்தம் மூலம் ஆயுத கிளர்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டது. இதற்கு மேற்கத்திய நாடுகள்தான் காரணம் என புதின் குற்றம்சாட்டியிருந்தார்.

    இந்த நிலையில் அமெரிக்காவுக்கும், நேட்டோ நாடுகளுக்கும் இதில் தொடர்பில்லை என பைடன் தெரிவித்துள்ளார்.

    கருங்கடல் பகுதியில் பறந்த இங்கிலாந்தின் இரண்டு போர் விமானங்களை ரஷிய விமானங்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திருநெல்வேலி பாராளுமன்ற எம்.பி. ஞான திரவியம் கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்படுவதாக புகார் வந்ததன் அடிப்படையில் திமுக கட்சியின் தலைமை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    புகார் குறித்த விளக்கத்தினை 7 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக பொதுச்செயலார் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    மத்திய அரசில் உள்ளவர்கள் மணிப்பூர் வன்முறை குறித்து பேசவில்லை. சீனாவின் பெயரை உச்சரிப்பதில்லை. ஆனால், ஒபாமாவை தாக்கி பேச ஆர்வமாக உள்ளார்கள் என ஓவைசி விமர்சனம் செய்துள்ளார். மேலும், மணிப்பூர் வன்முறை விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் திறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    டெல்லியில் பட்டப்பகலில் வழிமறிப்பு ரூ.2 லட்சம் கொள்ளையடித்த சம்பவத்தில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்ற நபர்களை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை சுற்றி வளைக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

    ×