என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    குண்டர் சட்ட அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து, காவல் துறைக்கு வழங்கிட சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. தேவையான சட்ட திருத்தத்தை 4 வாரங்களில் மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உள்துறை செயலருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து வேலூர் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்த லீலா உத்தரவிட்டுள்ளார்.

    செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் காணொலி காட்சி வாயிலாக முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி அல்லி, எப்படி இருக்கிறீர்கள்? என செந்தில் பாலாஜியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு இன்னும் வலி இருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார். இதையடுத்து, செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி உத்தரவிடக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட்டு முதன்மை அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    ஓட்டல்களில் வழக்கமாக தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மல்லி சட்னி இடம் பிடித்திருக்கும். ஆனால் இப்போது விலை உயர்வு காரணமாக கடந்த சில நாட்களாக ஓட்டல் மெனுவிலும் தக்காளி சட்னி இல்லை. விலை உயர்வு காரணமாக தக்காளி சட்னி கிடையாது.

    துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ''தமிழகத்தில் இனிமேல் சினிமாவில் இருந்து வந்து பெரிய அரசியல் தலைவராக முடியாது என்று நான் நினைக்கிறேன். ஒரு கூட்டத்தை அமைப்பாக மாற்ற முடியாது. கூட்டத்தை கட்சியாக மாற்ற முடியாது'' என்றார்.

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 10-ந்தேதி வரை நடைபெறும் எனத் தெரிகிறது. மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஓரிரு நாட்களில் தேதியை இறுதி செய்யும். ஜூலை 17 அல்லது 20-ந்தேதி ஆகிய இரண்டு தேதிகளில் ஒன்றில் தொடங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 72 மணி நேர பட்டினி போராட்டம் சேப்பாக்கத்தில் நடைபெற்றது. காலமுறை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும், ஓய்வூதியம் ரூ.9000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடந்தது. இந்நிலையில், அமைச்சர் கீதா ஜீவன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து சேப்பாக்கத்தில் நடந்த தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 72 மணி நேர போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

    கோவா, குஜராத் மற்றும் மேற்கு வங்காளத்தில் 10 ராஜ்யசபை இடங்களுக்கான தேர்தல் ஜூலை 24-ம் தேதி நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் ஜூலை 24-ம் தேதி நடத்தப்படும். காலியாக உள்ள இந்த இடங்களுக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கு ஜூலை 13-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யான ராகுல் காந்தி தலைநகர் டெல்லியில் உள்ள கரோல் பாக் பகுதிக்கு திடீரென வந்தார். அங்கு டூ வீலர் பழுது பார்க்கும் ஒர்க் ஷாப்பிற்குள் நுழைந்த அவர் அங்கிருந்த மெக்கானிக்குடன் அமர்ந்து இரு சக்கர வாகனங்களை பழுது பார்த்துக் கொண்டிருந்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    சேலத்தில் நடைபெற்ற டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய கோவை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. ராம் அரவிந்த் அதிரடியாக ஆடி 50 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய சேலம் அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் கோவை 79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்தில் நீடிக்கிறது.

    புதுச்சேரியில் நீட் அல்லாத படிப்புகளுக்கு தரவரிசை பட்டியலை சென்டாக் வெளியிட்டுள்ளது. நீட் அல்லாத படிப்புகளான பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் தொடர்பான மேலும் விவரங்களை http://centacpuducherry.in என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

    ×