என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் சென்று நேற்று நாடு திரும்பிய பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் ஒரே நாளில் ஐந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

     

    டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று சேலத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பேந்தர்ஸ் ஆகிய அணிகள் மோதின. முதலில் ஆடிய மதுரை அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் சேர்த்தது. 142 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து அவுட்டானது. இதன்மூலம், மதுரை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிப்பெற்றது.

    டிஎன்பிஎல் தொடரில் இன்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் வாஷிங்டன் சுந்தர் 30 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் விளாசினார். இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்குகிறது.

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனசபை மீது ஏறி தரிசனம் செய்வதற்கு தடை விதித்து தீட்சிதர்கள் பதாகை வைத்திருந்தனர். இந்த பதாகையை அகற்றச் சென்ற இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சரண்யாவை பணி செய்ய விடாமல் தடுத்ததாக தீட்சிதர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

    சென்னையில் நடைபெற்ற சிற்பி திட்டத்தின் நிறைவு விழாவில் மாணவர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடத்தை நோக்கி பயணிப்பதாக கூறினார். மேலும், பள்ளி கல்வி துறை ஏராளமான திட்டத்ங்கள செயல்படுத்தி வருவதாகவும், தரமான கல்வி வழங்குவதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் கூறினார்.

    காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இந்தியாவை பேணிக் காக்கும் பொறுப்பு மாணவர்களின் கைகளில் உள்ளது என்றும் முதலமைச்சர் பேசினார். விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பிரபல ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் பல சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். இவர் தனது சமூக வலைதளத்தில் சாந்தோம் மற்றும் ஆழ்வார்பேட்டையில் ஒரு நாளிலேயே மின்சார விநியோகத்தில் அதிகமான ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுள்ளது. மின்சாரத் துறையின் செயல்பாட்டிற்கு என்ன நேர்ந்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதற்கு மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உடனடியாக பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவுறுத்தப்படும். நகரம் முழுவதும் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருவதால் இது போல் நடக்கிறது. சிரமத்திற்கு வருந்துகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    பொறியியல் படிப்புக்கான தரவரிசையில் 102 பேர் 200-க்கு 200 கட்ஆப் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதில் 100 பேர் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள். இதில் நேத்ரா என்ற மாணவி முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அடுத்த சிறுத்தொண்டநல்லூர் என்ற ஊரை சேர்ந்தவர் ஆவார். அவர் திருச்செந்தூரில் உள்ள காஞ்சி ஸ்ரீசங்கரா அகாடமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் படித்தவர்.

    தர்மபுரியை சேர்ந்த ஹரிணிகா என்ற மாணவி 2-வது இடத்தை பிடித்துள்ளார். திருச்சியை சேர்ந்த ரோஷினி பானு என்ற மாணவி 3-வது இடத்தை பெற்றுள்ளார். முதல் 3 இடங்களை பெற்றவர்கள் மாணவிகள் ஆவர்.

    மணிப்பூர் நிலைமை குறித்து மத்திய மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் அமித்ஷா விளக்கினார்.

    தனியார் பள்ளிகளில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்கு ஏற்ப ஆசிரியர்களையும் நியமித்து தாய்மொழியை கற்று கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.




    டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். மேலும் குற்றவியல் நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நிர்ணயம் செய்யப்பட்ட எம்.ஆர்.பி. விலைக்கே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று அமைச்சர் முத்துசாமி கூறி உள்ளார்.

    தமிழக நிதிநிலை அறிக்கையில் ஆயிரம் ரூபாய் மகளிருக்கு வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் 15-ந் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் முன்னேற்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை சந்திக்க வேண்டும் என பிரபல கொள்ளையன் செல்போன் டவரில் ஏறி மிரட்டல் விடுத்ததால் நமக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    ×