என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    மது பானங்கள் விற்பனையில் கேரள மாடலை பின் பற்ற திட்டமிட்டுள்ளனர். இதற்காக அதிகாரிகள் குழு ஒன்று கேரளா சென்று பார்வையிட்டு வந்துள்ளது. கேரள மாடல் என்பது டாஸ்மாக் கடையில் பில் கவுண்டர் தனியாக இருக்கும்.

    பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவில் சிறுபான்மையினர் உரிமை குறித்து விவாதிக்க வேண்டும். நான் என்றால் கட்டயாம் விவாதித்திருப்பேன் என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா குறிப்பிட்டிருந்தார்.

    அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ''முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் 6 நாடுகள் மீது குண்டு வீசியது யார் ஆட்சியில்?'' என நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    காங்கிரஸ்- ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையில் பூசல் இருந்து வரும் நிலையில், ஆம் ஆத்மி அனைத்துக்கட்சி கூட்டத்தின்போது பத்திரிகையாளர்களை சந்திக்க மறுப்பு தெரிவித்தது. இதற்கு காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் ஆட்சேபனை தெரிவித்த நிலையில், ஒரு பக்கம் ஆதரவு கேட்கிறார். மறுபக்கம் விமர்சனம் செய்கிறார். எங்களுடன் கைக்கோர்க்க விரும்புகிறாரா? அதே இடைவெளியில் நீடிக்க விரும்கிறாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    செப்டம்பர் மாதம் 23-ந்தேதி விநாயர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி 156 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருப்பதாக மத்திய ரெயில்வே மண்டலம் அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு நாளையில் இருந்து நடைபெறும் என அறிவித்துள்ளது.

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார், விவகாரத்தில், "எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடரும், ஆனால் அது (போராட்டம்) நீதிமன்றத்தில் இருக்கும், சாலையில் அல்ல" என்று மல்யுத்த வீரர்கள் தங்களின் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

    அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளின் அரசு முறைப் பயணங்களை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார். பிரதமர் மோடியை டெல்லி விமான நிலையத்தில் பாஜக தலைவர் ஜே.பி நட்டா, டெல்லி பாஜக தலைவர் வீரேந்திரா சச்தேவா மற்றும் கட்சி எம்பிக்கள் வரவேற்றனர்.

    அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளின் அரசு முறைப் பயணங்களை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார். பிரதமர் மோடியை டெல்லி விமான நிலையத்தில் பாஜக தலைவர் ஜே.பி நட்டா, டெல்லி பாஜக தலைவர் வீரேந்திரா சச்தேவா மற்றும் கட்சி எம்பிக்கள் வரவேற்றனர்.

    எகிப்து பயணம் குறித்து பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "எகிப்து பயணம் வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்தது. இந்த பயணம் மூலம் இந்திய- எகிப்து உறவு மேலும் பலப்படுத்தப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் 46 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணியை வீழ்த்தி திருப்பூர் அணி அபாரமாக வெற்றிப்பெற்றது.

    சேலத்தில் இன்று நடந்த முதல் டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய கோவை 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 206 ரன்களை குவித்தது. சாய் சுதர்சன் அதிரடியாக ஆடி 83 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய திண்டுக்கல் 147 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் கோவை 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தலை ஜூலை 11-ம் தேதி நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் திட்டமிட்டது. இந்நிலையில், மல்யுத்த சம்மேளன தேர்தலை எதிர்த்து அசாம் மல்யுத்த சங்கம் கவுகாத்தி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த கவுகாத்தி ஐகோர்ட், ஜூலை 11ம் தேதி நடைபெற இருந்த இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

    திருவள்ளூரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றதால் எந்த தாக்கமும் ஏற்படாது. தி.மு.க.விற்கு இனி ஒவ்வொரு மாதமும் கைது மாதம் தான். அமலாக்கத்துறை சோதனையில் இருந்து எவரும் தப்ப முடியாது. தேர்தல் நெருங்கும்போது தி.மு.க. கூட்டணி கட்சிகள் அ.தி.மு.க.வுக்கு வர வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

    ×