என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் சிந்தனைகள் மேலும் ஒளிமயமான, சமத்துவமான எதிர்காலத்தை நோக்கி நம்மைத் தொடர்ந்து வழிநடத்தட்டும் என பதிவிட்டுள்ளார். இந்நிலையில், முன்னாள் பிரதமரும், சமூக நீதிக் காவலருமான வி.பி.சிங்கிற்கு மாநில கல்லூரி வளாகத்தில் சிலை நிறுவப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி எகிப்து நாட்டுக்கு அரசுமுறை பயணமாக தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். அவரை அந்நாட்டின் பிரதமர் முஸ்தபா மட்புலி விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார். இந்நிலையில், எகிப்து அதிபர் அப்துல் பதா அல் சிசியை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் விதமாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்பின், எகிப்து அதிபர் அப்துல் பதா அல் சிசி பிரதமர் மோடிக்கு ஆர்டர் ஆப் தி நைல் விருதை வழங்கி கவுரவித்தார்.

    பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டம் ஹாஜிபூரில் பால் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில் நெரிசல் ஏற்பட்டு பலர் காயம் அடைந்தனர். கியாஸ் கசிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.

    அமெரிக்காவில் டிரைவர் காரில் கடத்தி செல்வதாக நினைத்து துப்பாக்கியால் தலையில் சுட்ட பெண்.

    கடையை மூடி விட்டு மன்மோகன் சிங் வீட்டுக்கு சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    கைதான அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். தமிழகத்தில் மதுபான பார்கள் மூலம் ஒரு நாளுக்கு ரூ.10 கோடி என ஆண்டுக்கு ரூ.3,600 கோடி ஊழல் செய்துள்ளனர். இதற்கு தான் மத்திய அரசு ரெய்டு நடத்துகிறது. செந்தில் பாலாஜி வாக்குமூலம் கொடுத்துவிட்டால், பலர் சிக்குவார்கள். இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    வங்க கடல் பகுதியில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காாரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அழகிரியின் பதவி நீட்டிக்கப்படுமா? அல்லது புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா? என்பது இன்னும் ஓரிரு வாரத்தில் தெரிந்து விடும் என்று மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    1500-க்கும் அதிகமானோர் சூழ்ந்ததால் கிராமத்தில் இருந்து வெளியேறிய ராணுவம்மணிப்பூர் இம்பாலின் கிழக்குப் பகுதியில் உள்ள இதாம் கிராமத்தில் ஆயுதங்களுடன் கிளர்ச்சியாளர்கள் மறைந்து இருந்தனர். அவர்களை ராணுவம் கைது செய்தது. அந்த நேரத்தில் ராணுவ நடவடிக்கைக்கு எதிராக கிராம மக்கள் திரண்டனர். அவர்கள் ராணுவத்தை சுற்றி வளைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பெண்கள் தலைமையிலான குழுக்களும் ராணுவத்தை எதிர்த்து நின்றன. ராணுவ நடவடிக்கை எடுத்தால் கடும் உயிர்ச்சேதம் நிகழும் என்பதால், கிளர்ச்சியாளர்களை விடுவித்து கைப்பற்றிய ஆயுதங்களுடன் ராணுவம் வெளியேறியது.

    மேற்கு வங்காள மாநிலம் பங்குராவில் உள்ள ஒண்டா ரெயில் நிலையத்தில் ரெயில்வே பராமரிப்பு ரெயில் மற்றும் சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் கராக்புர்- பங்குரா- அத்ரா ரெயில்பாதையில் ரெயில்வே சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    சேலத்தில் இன்று நடந்த டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சேப்பாக் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. கேப்டன் பாபா அபராஜித் அதிரடியாக விளையாடி 79 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய நெல்லை அணி கேப்டன் அருண் கார்த்திக்கின் அதிரடி சதத்தால் 18.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக எகிப்து புறப்பட்டுச் சென்றார். எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு சென்றடைந்தார் பிரதமர் மோடி. விமான நிலையத்தில் எகிப்து பிரதமர் முஸ்தபா மாட்போலி உற்சாகமாக வரவேற்றார். எகிப்து நாட்டிற்கு முதல் முறையாக பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×