என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இருதயத்தில் 4 அடைப்புகள் இருந்ததால் கடந்த 21-ம் தேதி அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என காவேரி மருத்துவனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஐசியுவில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தனி அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    உக்ரைனில் சண்டையிட்டு வந்த ரஷிய ராணுவத்தின் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழு, ரஷிய ராணுவத்திற்கு எதிராக திரும்பியிருக்கிறது. ரஷிய ராணுவ மந்திரியை நீக்க வலியுறுத்தி ஆரம்பித்துள்ள கிளர்ச்சியின் முதல் படியாக, ரோஸ்டோன் நகரில் உள்ள ராணுவ தலைமையகத்தை கைப்பற்றிவிட்டதாக அறிவித்துள்ளனர். ராணுவ தலைமையகத்தில் இருந்தபடி வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

    புதிய விதிமுறையின்படி காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பயன்படுத்தும் மின்சாரத்துக்கு கட்டணம் 25 சதவீதம் அதிகரிக்கும். அதிக மின் பயன்பாட்டு நேரங்கள் மற்றும் குறைந்த மின் பயன்பாட்டு நேரத்துக்கு எவ்வளவு கட்டணம் என்பது வெளியிடப்படும் என்று மத்திய மின் துறை மந்திரி ராஜ்குமார் சிங் தெரிவித்துள்ளார்.

    பழனி முருகன் கோவிலுக்கு இந்துக்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர் என்று பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் இந்துக்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், வென்டிலேட்டர் கருவி அகற்றப்பட்டு அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

    இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு, அண்ணாமலை சென்னையில் இருந்து நேற்று புறப்பட்டார். இந்நிலையில், லண்டன் சென்றடைந்த அண்ணாமலை அங்குள்ள முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அண்ணாமலைக்கு அங்கு பரிவட்டம் கட்டி, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    பீகாரில் நடைபெறற எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு லாலு பிரசாத் யாதவ் கூறுகையில், "இப்போது நான் முழு உடல் தகுதியுடன் உள்ளேன். இனி நரேந்திர மோடியை எதிர்கொள்ளவும் உடல்தகுதியுடன் இருக்கிறேன்" என்றார். 

    நடிகர் போஸ் வெங்கட் ஒரே நாளில் சகோதரியையும், சகோதரனையும் இழந்துள்ளார். இருவரும் மாரடைப்பால் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்கப் பயணத்தில் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக அமெரிக்காவின் முக்கிய இடங்களில் மூவர்ணக் கொடி வண்ணங்களில் ஜொலிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    ஒருநாள் உலக கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் நேற்று ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ) - ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில், யு.ஏ.இ. அணி 35.3 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது. இதனால் ஸ்காட்லாந்து அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. 

    பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அப்போது பேசிய மெகபூபா முப்தி, மகாத்மா காந்தியின் இந்தியாவை, கோட்சேவின் நாடாக மாற்றுவதை அனுமதிக்க முடியாது என்றார். நாட்டில் சிறுபான்மையினர் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள், ஜனநாயகம் எப்படி குழிதோண்டி புதைக்கப்படுகிறது என்பதை நாடு கண்கூடாக காண்பதாகவும், அதனை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்கொள்வதாகவும் மெகபூபா குறிப்பிட்டார்.

    "இலங்கையில் உள்ள பெரிய மனித புதைகுழிகளும் வெற்றியடையாத அகழ்வுகளும்" என்ற தலைப்பில் சர்வதேச மனித உரிமைகள் குழு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இலங்கை முழுவதிலும் இன்னும் ஆயிரக்கணக்கான சடலங்கள் புதையுண்டு கிடப்பதாக கூறியதுடன், மனித புதைகுழிகள் தொடர்பான காவல்துறை ஆவணங்களை அப்போதைய ராணுவ அதிகாரியாக இருந்த கோத்தபய ராஜபக்சே அழித்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சர்வதேச சட்டத்தின்படி கோத்தபய ராஜபக்சே மீது இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×