என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். கூட்டம் முடிந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பாட்னாவில் நடந்த எதிர்கட்சிகள் கூட்டம் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 7 முக்கிய கருத்துக்களை எடுத்து வைத்தேன். பிரதமர் வேட்பாளர் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என தெரிவித்தார்.

    பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு பின்னர், ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட அறிக்கையில், டெல்லி அவசர சட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை தெரிவிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியிருந்தது. காங்கிரஸ் கட்சி டெல்லி மக்கள் பக்கம் இருக்கிறதா? அல்லது மோடி அரசின் பக்கம் இருக்கிறதா? என்ற சந்தேகம் எழுவதாகவும், இதுபற்றி காங்கிரஸ் முடிவு செய்ய வேண்டும் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் அரசாணையை காங்கிரஸ் பகிரங்கமாக எதிர்க்கும் வரை, இனி நடக்கும் எதிர்க்கட்சி கூட்டங்களில் பங்கேற்க மாட்டோம் என்றும் ஆம் ஆத்மி கட்சி குண்டைத் தூக்கி போட்டுள்ளது. 

    மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே, பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று மதியம் தொடங்கியது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அடுத்த ஆலோசனைக் கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக நூலுக்கான சாகித்ய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆதனின் பொம்மை என்ற நூலை எழுதிய எழுத்தாளர் உதய சங்கருக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த நூலின் மூலம் தமிழர்களின் தொன்மையான வரலாற்றை அறிய முடியும்.இதேபோல், திருக்கார்த்தியல் என்ற சிறுகதை தொகுப்பை எழுதிய எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு சாகித்ய யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.

    பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 20 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பாரதிய ஜனதாவுக்கு எதிராக மிகப்பெரிய எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒடிசாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா பேசுகையில், இன்று அரசியலில் விசித்திரமான விஷயங்கள் நடக்கின்றன. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்கள் தற்போது அவரது பேரன் ராகுல் காந்தியை வரவேற்கின்றனர் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    டைட்டன் நீர் மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் வெடித்து சிதறி அதில் பயணம் செய்த பாகிஸ்தான் தொழில் அதிபர், அவரது மகன் உள்ளிட்ட 5 கோடீசுவரர்களும் உயிர் இழந்தது தற்போது உறுதியாகி உள்ளது.

    சென்னை மாநகராட்சி நிர்வாகம் ரூ.100 கோடி மின் கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்பதாகவும், மாதம் ரூ.5 கோடி வீதம் 20 மாதங்கள் வரை கட்டண நிலுவைத் தொகையை செலுத்த மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    நிதிஷ் குமார் பாட்னாவில் 2024-ம் ஆண்டுக்கான தேர்தல் திருமண ஊர்வலத்தை அலங்கரித்து கொண்டிருக்கிறார். ஆனால், யார் மணமகன் (பிரதம வேட்பாளர்). ஒவ்வொருவரும் தங்களை பிரதம வேட்பாளர் என அழைத்து வருகிறார்கள் என பா.ஜனதா எம்.பி. ரவி சங்கர் பிரசாத் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் குறித்து கிண்டலடித்துள்ளார்.

    திண்டுக்கல்லில் உள்ள மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. நாகராஜ் தலைமையிலான 10 பேர் கொண்ட போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். காஞ்சிபுரத்தில் பணியாற்றியபோது பொருட்கள் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்ததன் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 4 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் அவர் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசுடன் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம். இவர் பாராளுமன்ற எம்.பி.யாக உள்ளார். இவர் இன்று காலை இதய சிகிச்சை தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மருத்துவமனையில் அனுமதி

    ×