என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    அமெரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், " அமெரிக்க பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவதை பெருமையா கருதுகிறேன். உள்கட்டமைப்பில் இந்தியா மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இந்தியா வளர்ந்தால் ஒட்டுமொத்த உலகமும் வளரும் " என்றார்.

    பீகார் சென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பாட்னாவில் ராஷ்ட்ர ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாவை சந்தித்தார். மூத்த தலைவரான லாலு பிரசாத் யாதவிடம் ஆசி பெற்ற மு.க.ஸ்டாலின், பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.

    கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் அருகே காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலின் உடைந்த பாகங்க நீர்மூழ்கி ரோந்து வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் நேபாளம்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் முடிவில், நேபாளம் அணி 49.4 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன்மூலம், 101 ரன்களில் நேபாள அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபாரமாக வெற்றிப் பெற்றுள்ளது.

    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில், நெல்லை அணி 15.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், 5 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் அணியை வீழ்த்தி நெல்லை அணி அசத்தலாக வெற்றிப் பெற்றது

    வெள்ளை மாளிகை வளாகத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அமெரிக்கவாழ் இந்தியர்களால் இந்தியாவின் பெருமை உயர்ந்துள்ளது என்றார். மேலும், அமெரிக்கவாழ் இந்தியர்கள், அமெரிக்கா-இந்தியா இடையிலான உறவுக்கு பாலமாக திகழ்வதாகவும் கூறினார்.

    வள்ளலாரை சனாதன தர்மத்திற்கு இழுப்பது ஆளுநரின் அறியாமையை காட்டுவதாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை வெளிப்படைத் தன்மையுடன் நடப்பதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறுவதாகவும் அவர் தெரிவித்தார். 

    தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக, கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தேவையான அனைத்து அனுமதியும் கிடைத்திருப்பதால் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கான பணிகளை விரைவில் தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

    அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்வு பெற்றவுடன், அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இன்று தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்பதற்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.

    செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தனன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து வரும் நிலையில் எச்-1பி விசாவில் புதியை நடைமுறையை கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடைமுறையால் இந்தியர்கள் அதிக அளவில் பயன்பெறுவார்கள் எனத்தெரிகிறது.

    ×