என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    இந்திய பிரதமர் மோடி நியூயார்க்கில் இருந்து வாஷிங்டன் சென்றடைந்தார். விமான தளத்தில் இருந்து வெள்ளை மாளிகை சென்ற பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர்.

    அதன்பின் இருநாட்டு தலைவர்களும் பரிசுகளை பரிமாறிக்கொண்டனர். ஜோ பைடனுக்கு பல்வேறு பொருட்கள் அடைங்கிய சந்தனப்பெட்டியை மோடி பரிசாக வழங்கினார். ஜில் பைடனுக்கு பச்சை நிற வைரத்தை பரிசாக வழங்கினார்.

    அமெரிக்காவில் அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி நியூயார்க்கில் இருந்து புறப்பட்டு வாஷிங்டனுக்கு சென்றடைந்தார். பின்னர், வாஷிங்டன் டிசியில் உள்ள ஆண்ட்ரூஸ் என்ற விமான தளத்திற்கு வந்தடைந்ததும், பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு மற்றும் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அமெரிக்காவில் அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி நியூயார்க்கில் இருந்து புறப்பட்டு வாஷிங்டனுக்கு சென்றடைந்தார். பின்னர், வாஷிங்டன் டிசியில் உள்ள ஆண்ட்ரூஸ் என்ற விமான தளத்திற்கு வந்தடைந்ததும், பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு மற்றும் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    நடிகர் விஜய்யின் 49-வது பிறந்தநாளை முன்னிட்டு 'லியோ' படக்குழு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெற்றுவரும் 12வது லீக் ஆட்டத்தில் பால்சி திருச்சி, லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. திருச்சி அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்தது. 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. ஆனால், ஆட்டத்தின் முடிவில் 18.2 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்து கோவை கிங்ஸ் அணி அபாரமாக வெற்றிப்பெற்றது.

    தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரின் இன்றைய போட்டியின்போது இந்தியா- பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. போட்டியின் நிர்வாகிகள் தலையிட்டு வீரர்களை அமைதிப்படுத்தி மீண்டும் ஆட்டத்தை தொடங்கினர். இதைதொடர்ந்து, இந்திய அணி தலைமை பயிற்சியாளர ஸ்டிமாக்கிற்கு ரெட் கார்டும், பாகிஸ்தானின் பயிற்சியாளர் ஷாஜாத் அன்வாருக்கு மஞ்சள் அட்டையும் வழங்கப்பட்டது.

    தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரின் இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டி இன்று பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் முடிவில் 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரமாக வெற்றிப் பெற்றது.

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஐ.நா. சபை வளாகத்தில் இந்திய பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பிரமாண்ட யோகாசன நிகழ்ச்சியானது, கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அதிக நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி என்ற உலக சாதனையை படைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வென்றது. இதன்மூலம் திண்டுக்கல் அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.

    அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே அ.தி.மு.க.வினர் ஒன்று திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான கழக நிர்வாகிகள் பங்கேற்று தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.

    ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் நாளை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ள நிலையில், பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடும் மின்வாரிய ஊழியர்களுக்கு அந்த நாளுக்கான ஊதியம் கிடைக்காது என்று மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ஹோண்டுராஸ் நாட்டு சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 41 பெண் கைதிகள் உயிரிழந்தனர். இதில் 26 பேர் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டனர். மற்றவர்கள் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொல்லப்பட்டனர்.

    ×