என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் மாநிலம் பாட்னாவில் மதசார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் 23-ந் தேதி நடைபெறுகிறது. அதில் பங்கேற்க நானும் பாட்னா செல்கிறேன். ஜனநாயக போர்களத்தில் கருணாநிதியின் தளபதியாக நானும் பங்கேற்க இருக்கிறேன் என்று பேசியுள்ளார்.

    சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் மத்திய மந்திரிகள், ஆளுநர்கள், முதலமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யோகா செய்தனர்.

    அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் இருதய அறுவை சிகிச்சை இன்று காலை 5.30 மணியளவில் தொடங்கியது.

    பொது மக்களின் கோரிக்கையை ஏற்று சென்னையில் காலை மற்றும் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு வேகத்தை மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 40 கி.மீ வேகத்தில் சென்றால் அபராதம் கிடையாது என்று சென்னை போக்குவரத்து காவல்துறை விளக்கமளித்துள்ளது.

    பொது மக்களின் கோரிக்கையை ஏற்று சென்னையில் காலை மற்றும் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு வேகத்தை மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 40 கி.மீ வேகத்தில் சென்றால் அபராதம் கிடையாது என்று சென்னை போக்குவரத்து காவல்துறை விளக்கமளித்துள்ளது.

    ஆஷஷ் தொடரின் ஐந்தாவது நாள் ஆட்டம் நேற்று பிற்பகல் தொடங்கியது. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 92.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றிப்பெற்றது.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் முடிவில், 18.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து திருப்பூர் தமிழன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லையை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது.

    மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் காரணமாக இணையத்தள சேவைக்கான தடை உத்தரவு வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதால் பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். அதன்படி நாளை அதிகாலை 4 மணியளவில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.

    திருவாரூர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, பாஜகவை மீண்டும் ஆள அனுமதிப்பது தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும், தமிழ் இனத்திற்கும் இந்திய நாட்டிற்கும், இந்தியாவின எதிர்காலத்திற்கும் கேடாக முடியும் என்றார்.  மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் எப்படி ஒருமுகமாக இருந்து செயல்படுகிறோமோ, செயல்பட்டு வெற்றியை பெறுகிறோமோ, அத்தகைய செயல்பாடும் ஒருங்கிணைப்பும் இந்திய அளவில் ஏற்பட்டாகவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    மத்திய பாஜக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் சென்னை தாம்பரத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசும்போது, அதிமுகவில் கூட்டணியில் இருப்பதாகவும், கூட்டணி தர்மத்தின்படி மரியாதை மற்றும் அங்கீகாரத்தை கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறினார். 

    தமிழக அரசுக்கு இடையூறாக உள்ள கவர்னரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. நிர்வாகி ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்து ஒட்டியுள்ள போஸ்டர் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×