என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாரின் தமிழக பயணம் திடீர் ரத்தாகி உள்ளது. உடல்நலக்குறைவால் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பீகார் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் பங்கேற்க உள்ளார்.

    வியட்நாமின் கடற்படை திறன்களை மேம்படுத்துவதற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கார்வெட் ஏவுகணையான ஐ.என்.எஸ். கிர்பான் ஏவுகணையை இந்தியா வியட்நாமுக்கு பரிசாக வழங்குவதாக ராஜ்நாத் சிங் அறிவித்தார்.

    இன்று கனமழைப்பு வாய்ப்பு இல்லை என்பதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை. வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி 4 நாள் பயணமாக இன்று காலை அமெரிக்கா புறப்பட்டார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அவருடைய மனைவி ஜில் பைடன் ஆகியோரது அழைப்பின் பேரில் அரசு முறை பயணமாக செல்கிறார்.

    சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், அண்ணாசாலை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தரமணி, வேளச்சேரி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளிலும், ஈ.சி.ஆர் மற்றும் திருப்போரூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டியில், இந்தியா சார்பில் தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி பங்கேற்றார். இன்று நடந்த அரையிறுதியில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனையிடம் 14-15 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்த பவானி தேவி, வெண்கலம் வென்றார். இந்திய வீராங்கனை ஒருவர் ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வென்று சாதனை படைப்பது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    டி.என்.பி.எல். போட்டியின் 9-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் இன்று இரவு நடந்தது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 126 ரன்களே எடுத்தது. தொடர்ந்து ஆடிய கோவை கிங்ஸ் சாய் சுதர்சன் அரை சதத்தால் 2 விக்கெட்டுக்கு 128 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று இரண்டாம் இன்னிங்சை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 273 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் பேட் கம்மின்ஸ், நாதன் லயன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது. 

    டிஎன்பிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹரிஷ் குமார் 32 ரன்கள் அடித்தார். சசிதேவ் 23 ரன்கள் அடித்தார். இதையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லைக்கா கோவை கிங்ஸ் அணி விளையாடுகிறது.

    சென்னையில் அதிவேக பயணத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு, புதிய ரேடார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. பகலில் 40 கி.மீ வேகத்தையும், இரவில் 50 கி.மீ வேகத்தையும் தாண்டினால், இனி அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. வியாசர்பாடி, பேசின் பாலம் இடையே தண்டவாளத்தில் தேங்கிய மழைநீரால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய 7 ரெயில்கள் ஆவடி மற்றும் திருவள்ளூரில் இருந்து இயக்கப்படுகிறது.

    சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. ஒருநாள் மழைக்கே பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். நேற்று இரவு முதல் இன்று காலை 8 மணி வரை சென்னையில் 207 இடங்களில் மழை நீர் தேங்கி நின்றதாக மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தன.

    ×