என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் ''டெல்லி, பஞ்சாபியில் எங்களது ஆட்சியை 50 வருடத்திற்கு யாராலும் அசைக்க முடியாது'' எனத்தெரிவித்துள்ளார்.

    செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில மேல்முறையீடு செய்துள்ளது.

    ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியை காங்கிரஸ் கட்சியில் இணைக்க ஷர்மிளா சம்மதம் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    மேலடுக்கு சுழற்சி காரணமாக தற்போது மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் 3 அல்லது 4 நாட்கள் நீடிக்கும். மேக கூட்டங்கள் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக இன்று தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 4 நாட்களுக்கு பிறகு மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது என்று தனியார் வானிலை நிபுணர் கூறியுள்ளார்.

    கடந்த 2021-ம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருதை உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள கீதா பிரஸ் பதிப்பகத்துக்கு வழங்கப்படுகிறது. காந்தி அமைதி விருது 1 கோடி ரூபாய் பணம், சான்றிதழ், பதக்கம் மற்றும் தறியில் நெய்த பாரம்பரிய துணி, கைவினைப் பொருட்களை கொண்டது ஆகும்.

    மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை மறுதினம் (ஜூன் 20-ம் தேதி) சென்னை வருகிறார். தாம்பரம் அருகே இரும்புலியூரில் மாலை 5 மணிக்கு நடைபெறும் பா.ஜ.க சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். அதன்பின், சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரளாவின் கொச்சிக்கு ராஜ்நாத்சிங் விமானத்தில் புறப்பட்டுச் செல்கிறார்.

    திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற டி.என்.பி.எல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 19.3 ஓவரில் 123 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜெகதீசன் கவுசிக் 45 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய திண்டுக்கல் அணி 124 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாபா இந்திரஜித் 78 ரன்கள் எடுத்தார்.

    குஷ்புவுக்கு எதிராக அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி மீது வழக்கு பதிந்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொடுங்கையூர் காவல் நிலையத்தில் சிவாஜி கிருஷ்ண மூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திமுக கூட்டத்தில் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி ஆளுநர் மற்றும் குஷ்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து, அவர் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து லாகூருக்கு சென்றுக் கொண்டிருந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், பெண்கள்ற, குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

    பிரேசிலின் தெற்கு மாநிலமான ரியோ கிராண்டே டோ சுலியில் நேற்று முன்தினம் கடுமையான வெப்பமண்டல சூறாவளி தாக்கியது. இதில், 11 பேர் உயிரிழந்தனர். 25 பேர் மாயமாகி உள்ளனர்.

    ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று மதியம் 2.03 மணியளவில் ஜம்மு காஷ்மீரின் ராம்பன் பகுதியில் 3.0 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ×