என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    காரைக்குடியில் இன்று பட்டப்பகலில் வினீத் என்ற வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரையைச் சேர்ந்த வினீத், வழக்கு தொடர்பாக காவல் நிலையத்திற்கு கையெழுத்திட சென்றபோது காரில் வந்த 5 பேர் அவரை வெட்டிக் கொலை செய்துள்ளனர். 

    வருகிற 21-ந்தேதி (புதன்கிழமை) செந்தில்பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. காலை 8 மணி முதல் இடிமின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. எழும்பூர், கோயம்பேடு, அம்பத்தூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. கோடை வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்கள் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நடிகர் விஜய் 12 மணி நேரத்துக்கும் மேலாக மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இறுதியில் வாரிசு ஸ்டைலில் ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்து விடைபெற்றார்.

    சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த அமிர்த ஜோதி ஐ.ஏ.எஸ். பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் அச்சு மற்றும் எழுதுபொருள் துறை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்தப் பொறுப்பில் இருந்த அருணா ஐ.ஏ.எஸ். சென்னை மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.

    சைதாப்பேட்டையில் நடந்த பா.ஜ.க. சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், பயமின்றி அரசியல் செய்ய பிரதமரை பார்த்து முதல்வர் ஸ்டாலின் கற்றுக்கொள்ள வேண்டும். தி.மு.க. யாரையும் கண்டு பயப்படாது என கூறுகின்றனர். ஆனால் எமர்ஜென்சியின்போது ஓடி ஒளிந்தனர். தனியார் மருத்துவமனையில் தான் உயர்தர சிகிச்சை கிடைக்கும் எனில் ஏழைகளையும் அங்கு அனுப்புங்கள் என்றார்.

    சென்னை நுங்கம்பாத்தில் இன்று மாலை சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்குவாஷ் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். அப்போது பேசிய அவர், " அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைவரையும் சாம்பியனாக மாற்றி வருகிறார்" என்று கூறினார்.

    சென்னை மாமல்லபுரத்தில் வரும் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஜி-20 மாநாடு நடைபெறுவதை தொடர்ந்து சென்னையில் 18ம் தேதி முதல் 5 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    குஜராத் மாநிலத்தில் பிபோர்ஜோய் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அம்மாநில முதல்வருடன் இணைந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டார்.

    மேற்கு உகாண்டாவில் உள்ள லுபிரிரா மேல்நிலைப் பள்ளிக்குள் நுழைந்த கூட்டணி ஜனநாயகப் படையைச் சேர்ந்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 38 மாணவர்கள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர்.

    அமலாக்கத்துறை காவலுக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நீதிமன்ற ஊழியர்கள் இன்று கையெழுத்து வாங்கினர். நேற்று செந்தில் பாலாஜி சுய நினைவில் இல்லாததால் அவரிடம் கையெழுத்து வாங்க முடியாமல் போனது. இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் 8 நாள் போலீஸ் காவலில் எடுத்ததற்காக கையெழுத்தை பெற்றனர்.

    ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று நடிகர் விஜய் நல்ல கருத்துதான் சொல்லி இருக்கிறார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

    ×