என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    தமிழக பா.ஜ.க. மாநிலச் செயலாளர் சூர்யா கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. பா.ஜ.க. தொண்டர்களை, இதுபோன்ற அடக்குமுறைகளால் முடக்கி விட முடியாது. எங்கள் குரல், மக்களுக்காக எப்போதும் துணிச்சலாக ஒலித்துக்கொண்டிருக்கும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    பெலாரஸ்க்கு அணுஆயுதங்கள் அனுப்பப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளை எச்சரிக்கவே பெலாரஸில் அணுஆயுதங்கள் நிலைநிறுத்தம். தற்போது அனுப்பியது முதல்முறையின் முதல் பகுதி. அணுஆயுதங்கள் நிலைநிறுத்தும் பணி கோடைக்கால முடிவு அல்லது இந்த வருட முடிவில் முடிவடையும் என புதின் தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி. வரும் பொதுத்தேர்தலில் தோல்வி உறுதியாகிவிட்டதை பா.ஜ.க. உணர்ந்துவிட்டது. எதிர்க்கட்சியினரை அரசியல் ரீதியாக எதிர்ப்பதற்குப் பதிலாக, தங்களுடைய தோல்விகளை மறைக்கக் கோழைத்தனமான, திமிர்த்தனமான நடவடிக்கைகளில் பா.ஜ.க. இறங்கியுள்ளது என பதிவிட்டுள்ளார்.

    கோவையில் இன்று நடைபெற்ற டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற நெல்லை பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த கோவை 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 181 ரன்கள் குவித்தது. சாய் சுதர்சன் 90 ரன்கள் விளாசினார். தொடர்ந்து ஆடிய நெல்லை, அஜிதேஷின் அதிரடி சதத்தால் கடைசி பந்தில் திரில் வெற்றியை ருசித்தது.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைதுசெய்தனர். உடல்நிலை சரியில்லாத செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என்ற தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் ஏற்கமறுத்தார். இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவார் என தெரிவித்துள்ளது.

    அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கான இலாகா மாற்றம், கூடுதல் இலாகா ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். ஆனால், செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது தொடர்பான பரிந்துரையை ஏற்க மறுத்துவிட்டார். செந்தில் பாலாஜி மீது மோசடி வழக்கும், அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதால், அமைச்சராக தொடர முடியாது என ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.

    சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ள நிலையில் சகோதரர் அசோக் குமார் மற்றும் அவரது மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மற்றவர்கள் செய்த தவறுக்கு நீங்கள் சி.பி.ஐ. விசாரணை கோரும்போது, நீங்கள் செய்த தவறுக்கு நாங்கள் சி.பி.ஐ. விசாரணை கோருவதில் என்ன குற்றம் கண்டீர்கள்? என்று முதலமைச்சருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார். யாரை அச்சுறுத்த இத்தனை ஆவேசம் என்றும் அண்ணாமலை கேட்டுள்ளார்.

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ரத்தத்தை மெலிதாக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சை இரண்டு அல்லது மூன்று நாட்கள் நடைபெறும். எனவே ஆபரேசன் நடைபெற இன்னும் 4 அல்லது 5 நாட்கள் ஆகலாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

    கடற்பகுதியை கண்காணிப்பதற்காக அமெரிக்காவிடம் இருந்து 31 நவீன டிரோன்களை 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இந்தியா வாங்க இருக்கிறது. மோடியின் அமெரிக்க பயணத்தின்போது இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.

    ம.பி., ராஜஸ்தானில் போட்டியிடாமல் இருக்க... காங்கிரஸ்க்கு ஆஃபர் வழங்கும் ஆம் ஆத்மிடெல்லி மற்றும் பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடமாட்டோம் என காங்கிரஸ் தெரிவித்தால், நாங்கள் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் போட்டியிடமாட்டோம் என ஆம் ஆத்மியின் டெல்லி மாநில சுகாதாரத்துறை மந்திரியான சவுரவ் பரத்வாத் தெரிவித்துள்ளார்.

    ஆஷஸ் தொடர் இன்று தொடங்கும் நிலையில், உடற்தகுதி பெற்றுவிட்டேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முழுத் தகுதியுடன் பந்து வீசுவேன். எங்களது பாஸ்பால் கிரிக்கெட் ஆட்டம் தொடரும் என இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
    ×