என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    மணிப்பூரில் மத்திய மந்திரி ரஞ்சன் சிங் வீடு பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்கப்பட்டது. ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரண்டு வந்ததால் தடுக்க முடியவில்லை என்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தெரிவித்தனர்.

    கடந்த மே மாதத்தில் இருந்து நடைபெற்று வரும் இந்த வன்முறைக்கு இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

    அமர்நாத் புனித யாத்திரை ஜூலை 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை 62 நாட்கள் நடைபெறுகிறது. அமர்நாத் யாத்திரை செல்லும்போது தோசை, பர்கர் உள்ளிட்ட 40 உணவுப் பொருட்கள் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தானியங்கள், பருப்பு வகைகள், பச்சைக் காய்கறிகள் மற்றும் சாலட் போன்ற ஆரோக்கியமான பொருட்கள் எடுத்துச் செல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளது. யாத்ரீகர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 5 கிலோமீட்டர் நடைபயிற்சி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி விலக வேண்டும் என முதல்வருக்கு கவர்னர் முன்னதாக கடிதம் எழுதியிருந்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் 2 துறைகளை 2 அமைச்சர்களுக்கு மாற்றக்கோரி பரிந்துரைத்த தமிழக அரசின் கடிதத்தை கவர்னர் ஏற்காமல் திருப்பி அனுப்பியுள்ளார். அரசியல் சட்டத்திற்கும் மாநில சுயாட்சிக்கும் எதிராக கவர்னர் செயல்படுகிறார் என தெரிவித்தார்.

    கோவையில் இன்று இரவு நடந்த டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய திருப்பூர் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய சேப்பாக் அணி 15.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 121 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. பாபா அபராஜித் 29 பந்தில் 46 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    அரபிக் கடலில் உருவான பிபோர்ஜேய் புயல் இன்று மாலை குஜராத்தின் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடலோர பகுதியில் கரைகடக்கத் தொடங்கியது. கரைகடக்கும் நிகழ்வு நள்ளிரவு வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் காரணமாக குஜராத் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன், கனமழை பெய்து வருகிறது. கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. பல்வேறு இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன. கூரை வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து காற்றில் பறந்தன.

    கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 6 மணியளவில் திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், "மறைந்த பின்னும் தமிழ் சமுதாயத்திற்காக பயன்படுபவர் தான் கருணாநிதி. கருணாநிதி வழியில் சோதனைகளை சாதனைகளாக மாற்றுவோம்" என்றார்.

    செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது விசாரணை நடத்திய ஐகோர்ட் நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர். மேலும் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கினர். ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை 22ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    கர்நாடகாவில் முந்தைய பாஜக ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகா வேறு அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. அவர் வகித்து வந்த மின்சாரத்துறையானது, அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதலாக ஒதுக்கப்பட உள்ளது. இது தொடர்பாக ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார்.

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் ஆர்.என். ரவியை அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் இன்று மாலை சந்தித்து மனு அளிக்க உள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை, செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    18 வயதுக்குட்பட்ட சிறுமி பிரிஜ்பூஷன் சிங் மீது அளித்த பாலியல் புகாரில் போதுமான ஆதாரம் இல்லையென்று டெல்லி போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்து உள்ளனர். இதனால் அவர் மீதான முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்.) ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தி.மு.க.வையோ-தி.மு.க.காரனையோ சீண்டிப் பார்த்தால் தாங்க மாட்டீர்கள். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை! பொறுப்புள்ள ஒன்றிய அரசாங்கத்தை ஆள்கிற பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க., அந்தப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி உள்ளார்.

    ×