என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    திமுக பைல்ஸ் என்ற பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதிற்கு எதிராக, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் அண்ணாமலை ஜூலை.14ல் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

    நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை நீக்கக்கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜி மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி சுய நினைவுடன் இருப்பதாகவும் உணவு மற்றும் மருந்துகளை எடுத்துக்கொள்வதாகவும் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    லங்கா பிரீமியர் லீக் ஏலம் நேற்று நடைபெற்றது. இந்த ஏலத்தின்போது சி.எஸ்.கே.யின் முன்னாள் வீரர் ரெய்னாவின் பெயர் ஏலம் விடும் நபரால் தேர்வு செய்யப்படாததால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். ஏன் அவரது பெயர் புறக்கணிக்கப்பட்டது என்பது குறித்து லங்கா பிரீமியர் லீக் நிர்வாகம் விளக்கம் அளித்தால்தான் தெரியவரும்.

    மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின்போது எதிர்க்கட்சிகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வன்முறையை உக்ரைன்- ரஷியா போருடன் ஒப்பிட்ட அம்மாநில பா.ஜனதா பொதுச் செயலாளர் அக்னிமித்ரா பால், ''நாம் போருக்காகவே சண்டை போடுகிறோம், மத்திய பாதுகாப்புப்படை வீரர்கள் வரவழைக்கவில்லை என்றால் அனைத்து கட்சிகளின் தொண்டர்கள் பலர் உயிரிழக்க நேரிடும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    அரபிக் கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக மாறியது. இந்தப் புயல் இன்று மாலை குஜராத் கடற்கரை மாவட்டமான கட்ச்- பாகிஸ்தானின் கராச்சி கடற்கரை இடையே கடரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதனால் குஜராத் மாநிலத்தில் கடற்கரையோரப் பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் சுற்றுப்பகுதியில் வசிக்கும் மக்கள் அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதுவரை 74 ஆயிரம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை பெற்று எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது கர்நாடகாவில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாஜக தொடர்ந்த இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் ஆடிய மதுரை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து களமிறங்கிய நெல்லை அணி, 38 பந்துகள் மீதமிருந்த நிலையில், 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

    அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, "செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவல் சரியானது. ஜாமின் வழங்க கூடாது, இடைக்கால ஜாமின் வழங்கவும் சட்டத்தில் இடமில்லை" என்று அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    எதிர்தாக்குதலில் ரஷியாவிடம் இருந்து சில கிராமங்களை மீண்டும் கைப்பற்றியுள்ளோம் என உக்ரைன் தெரிவித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கையில் உக்ரைனுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக புதின் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பதாக ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், செந்தில் பாலாஜிக்கு பை பாஸ் சர்ஜரி செய்ய ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

    ×