என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டத்தில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்று முதலில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது.

    மருத்துவ மாணவர் சேர்க்கையில், நீட் தேர்வு ஏற்கெனவே மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், நெக்ஸ்ட்டு தேர்வை அறிமுகப்படுத்துவது கிராமப்புற மற்றும் சமூகரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும், மாநில அரசின்கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதால், நெக்ஸ்ட்டு தேர்வு முறையினைக் கைவிட வேண்டுமென்றும், தற்போதுள்ள முறையே தொடர வேண்டும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

    வருமான வரி சோதனையாக இருந்தாலும் சரி, அமலாக்கத்துறை சோதனையாக இருந்தாலும் சரி அதற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கப்படும். இந்த சோதனை குறித்து எந்த விளக்கம் கேட்டாலும் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம் எனத் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

    ஜெயலலிதா பற்றியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைப் பற்றியும் தரக்குறைவாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை விமர்சித்துள்ளது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது என ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்தியை திணிப்பதிலேயே மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ஒவ்வொரு இந்திய குடிமகனும் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடும் நிலையில், மத்திய அரசு இந்தியை திணிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது என டுவிட்டர் பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    அண்ணாமலைக்கு நாவடக்கம் இல்லை, இனியும் தொடர்ந்தால் வாங்கி கட்டிக்கொள்வார். விமர்சிப்பதற்கும் ஒரு எல்லை உண்டு. அனைத்தையும் தாங்கிக்கொண்டு நீடிக்க முடியாது. கூட்டணியில் இருந்து கொண்டு அ.தி.மு.க.வின் தலைவரை விமர்சிப்பதை எப்படி ஏற்க முடியும்? அண்ணாமலை தனிக்காட்டு ராஜா போல் செயல்படுகிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்


    மருத்துவ கட்டமைப்புகள் சிறப்பாக உள்ள தமிழகத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனை தேவையே இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    தென்சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் உள்துறை மந்திரி அமித் ஷா ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில், தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர் வரவேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும்,  வரும் காலங்களில் ஒரு தமிழரையாவது பிரதமராக்குவோம் என்று உறுதி ஏற்பதாகவும் கூறினார். தமிழகத்தில் இருந்து காமராஜர், மூப்பனார் ஆகியோர் பிரதமர் ஆவதை தவறவிட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

    சேலம் மாவட்டம் கருப்பூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும், ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 390 முடிவுற்ற திட்ட பணிகள் தொடங்கி வைத்த அவர், 331 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே மின்சார ரெயில் தடம்புரண்டது. தண்டவாளத்தை விட்டு கடைசி 2 ரெயில் பெட்டிகள் தடம்புரண்டது. இதையடுத்து சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    ×