தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய கல்வித்துறை பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இருக்காது. மாணவர்களுக்கு மன அழுத்தம், தேர்வுத்துறைக்கு பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களால் தீவிர ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா உள்பட 8 மாவட்டங்களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் காரணமாக வருகிற 12-ந்தேதி திறக்கப்படுகிறது. பள்ளிகள் தாமதாக திறக்கப்படுவதன் காரணமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதி தீவிர புயலாக வலுவடைந்துள்ளது. இந்த அதிதீவிர புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகரும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலியாவை விட 173 ரன்கள் பின்தங்கியுள்ளது.
சிறப்பாக ஆடிய ரகானே 89 ரன்னிலும், பொறுப்புடன் ஆடிய ஷர்துல் தாகூர் அரை சதமடித்த நிலையில் 51 ரன்னிலும் அவுட்டாகினர். ஜடேஜா 48 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பஹ்ரைன் நாட்டில் கற்பழிப்பில் ஈடுபட்ட நபர், கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தால். அவர் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். இந்த சட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி வகுப்பறை கட்டிடம் இடிக்கப்பட்டது. உயிரிழந்தோரின் உடல்கள் வைக்கப்பட்டிருந்ததால் பள்ளிக்கு வர மாணவர்கள் அச்சம் தெரிவிப்பதாக கூறப்படும் நிலையில் இடிக்கப்பட்டது.
டெல்டா பகுதிகளில் நீர்நிலைகள் தூர்வாரப்படும் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சி, இருதயபுரத்தில் வயல் வெளியில் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். வயல் வெளியில் பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்த அவர், தூர்வாரும் பணி உள்ளிட்டவை குறித்தும் கேட்டறிந்தார்.
கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம் மற்றும் கண்ணூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு வருகிற 12-ந் தேதி வரை மாநில நிர்வாகம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது. மேலும் இது தென்தமிழக பகுதிகளிலும் பரவி உள்ளது. வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் உள்ளதால் 9 லட்சத்து 29 ஆயிரத்து 542 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றும் பட்டம் பெறாமல் உள்ளனர். உடனடியாக பட்டமளிப்பு விழாவை அனைத்து பல்கலைக்கழங்களில் நடத்த கவர்னர் முன்வர வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தி உள்ளார்.
வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிகக் குறைந்த அளவில் மின்கட்டணம் உயரும். வீட்டு இணைப்புகளுக்கு மின் கட்டணம் உயர்வு இல்லை. அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும். வீட்டு இணைப்பு நுகர்வோருக்கு ஏற்படும் 21.18% உயர்வை தமிழக அரசு ஏற்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.