என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    அமெரிக்காவின் இண்டர் மியாமி அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளதாக அர்ஜென்டினா கால்பாந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவின் அல் ஹிலால் கால்பந்து அணியின் ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தத்தையும் மெஸ்ஸி நிராகரித்தார்.

    ரெப்போ ரேட் விகிதம் 6.5 சதவீதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். கடந்த 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடந்த நிதிக்கொள்கை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

    மாலத்தீவு-லட்சத்தீவு முதல் கேரளா கடற்கரை வரை நிலையான மேகமூட்டம் ஏற்பட்டது. இது தென்மேற்கு பருவமழை ஆரம்பம் ஆகி விட்டதை காட்டுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதற்கேற்ப ஆலப்புழா, கொல்லம், பத்தினம்திட்டா, திருவனந்தபுரம் மாவட்டங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.

    என்ஜின் கோளாறு காரணமாக ஏர் இந்தியா விமானம் ரஷியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதையடுத்து, பயணிகளை ஏற்றிச் செல்ல மாற்று விமானம் அனுப்பப்பட்டது. அந்த விமானம் ரஷியாவின் மகாதன் விமான நிலையத்தை அடைந்த நிலையில், இன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு புறப்பட்டது. விமானம் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12.05 மணிக்கு சான் பிரான்சிஸ்கோ சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதி தீவிர புயலாக வலுவடைந்தது உள்ளது. இன்று காலை நிலவரப்படி, கோவாவில் இருந்து 870 கிமீ மேற்கு-தென்மேற்கு திசையிலும், மும்பையில் இருந்து 930 கிமீ தென்மேற்கிலும் புயல் மையம் கொண்டிருந்தது. அடுத்த 48 மணிநேரத்தில் புயல் படிப்படியாக மேலும் தீவிரமடைந்து, அடுத்த 3 நாட்களில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மேற்கு கடலோர மாநிலங்களில் கனமழைக்கு வாயப்பு உள்ளது.

    டெஸ்ட் அணியில் இருந்து மொயீன் அலி விலகியது இங்கிலாந்து அணிக்கு ஒரு பெரிய இழப்பாகவே இருந்து வந்தது. இந்த ஆஷஸ் தொடரில் அவரை விளையாட வைப்பதற்காக அவரது முடிவை திரும்ப பெற வேண்டும் என்று அவரிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது. பேச்சுவார்த்தையின்போது மொயீன் அலி மீண்டும் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். 

    வீடுகளில் 1 யூனிட் மின்சாரத்துக்கு 11 காசுகள் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தமிழக மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    மணிப்பூர் வன்முறை சம்பவத்தை தொடர்ந்து குகி சமூகத்தினர் டெல்லியில் உள்ள மத்திய மந்திரி அமித் ஷா வீட்டு முன்பு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மல்யுத்த வீராங்கனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்தது. அதனை ஏற்று பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் ஆகியோர் மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் வீட்டுக்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத்தும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.

    தென்கிழக்கு அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை இப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து புயலாக மாறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் பிபோர்ஜாய் புயலானது வடக்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக தீவிரம் அடைந்து கிழக்கு மத்திய அரபிக் கடலில் தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும், அரபிக் கடலில் மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் சென்னை பெரம்பூர் பின்னிமில் மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் 10 தோழமை கட்சித் தலைவர்கள் பங்கேற்று பேச உள்ளனர்.

    விஜய் 10, 12ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களை சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கில் வரும் 17ஆம் தேதி சந்திக்கிறார். தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு அறுசுவை விருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.2 கோடி செலவில் நலத்திட்ட உதவிகளையும் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தொடர்பாக விஜய் மக்கள இயக்க நிர்வாகிகளை இன்று சென்னை நீலாங்கரையில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×