என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். இந்நிலையில், செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பணமோசடி பிரிவில் 3 வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட நிலையில், புதிதாக ஊழல் தடுப்பு பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது.

    நெல்லையில் நடைபெற்ற டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய சேலம் அணி சன்னி சந்து அதிரடியால் 160 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய திண்டுக்கல் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்து வென்றது. பாபா இந்திரஜித் 83 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதமானது என்றும், சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறி சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது. 

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மாதாந்திர பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிந்து நாளை காலை அவர் வீடு திரும்புவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    ஜூன் 30ம் தேதி வரை 2.72 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதில், 87 சதவீதம் டெபாசிட் மூலமாகவும், 13 சதவீதம் மற்ற மதிப்பு நோட்டுகளாக மாற்றப்பட்டதன் மூலமாகவும் திரும்ப பெறப்பட்டுள்ளன. மொத்தம் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளில் 76 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளன. 

    தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதால், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    சென்னையில் நாளை முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது. வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை என 3 ஆக பிரித்து மொத்தம் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.

    மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் பெரிதாகி இருக்கும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடகத்துக்கு சென்றால் 'கோ பேக் ஸ்டாலின்' போராட்டத்தை பா.ஜனதா நடத்தும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.

    கடந்த 25 ஆண்டுகளில் 13-வது முறையாக இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி உள்ளது. பருவமழையின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    ஒரு அமைச்சரை சேர்க்கவோ, நீக்கவோ கவர்னருக்கு அதிகாரம் இல்லை. அவரை மத்திய அரசு கட்டுப்படுத்தாவிட்டால் அவர் தமிழக மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    அஜித் பவார் கட்சியை பிரித்து ஷிண்டேவின் அமைச்சரவையில் இணைந்ததன் மூலம் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் அரசியில் குறித்து விவாதிப்பதில்லை என சர்த பவார் தெரிவித்துள்ளார்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே செய்தியாளிடம் பேசுகையில், எதிர்க்கட்சிகள் ஒற்றுமையால் எங்கள் வளர்ச்சியை தடுத்து நிறுத்தமுடியாது. சரத் பவாரின் அந்தஸ்து மேலும் உயரும். அஜித் பவாருக்கு வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம். என்னால் ஒருபோதும் எனது மூத்த சகோதரருடன் சண்டையிட முடியாது. ஒரு சகோதரியாக அவரை எப்போதும் நேசிக்கிறேன் என்றார்.

    ×