என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    மாமன்னன் திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், " 'மாமன்னன்' திரைப்படம் சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு" என்று குறிப்பிட்டுள்ளார்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நெல்லையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சீகம் மதுரை பாந்தர்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இதில், மதுரை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்தது. ஆனால், திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இந்த போட்டியின் வெற்றியின் மூலம் மதுரை பாந்தர்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது. இதன்மூலம், குவைத்தை வீழ்த்தி 9வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்தியா வென்றது.

    நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகளில் சேர்ந்து செப்டம்பர் 30ஆம் தேதிக்குள்ளாக கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சீனாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு வலியுறுத்தி உள்ளது.

    முறையாக பார்த்தால் தவறாக சொல்லும் அண்ணாமலைதான் வெளியேற வேண்டும். அவருக்கு 'கோ பேக்' சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

    வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நேற்று அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பி உள்ளார்.

    மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் இன்னும் 10 நாட்கள் மட்டுமே போதுமானதாக உள்ளது. ஜூன் மாதத்திற்குரிய 9.19 டி.எம்.சி., ஜூலை மாதத்திற்குரிய 34 டி.எம்.சி. தண்ணீரை வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கு தமிழக அரசு கடிதத்தில் வலியுறுத்தி உள்ளது.

    ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலிபான் அரசு பெண்களுக்கு எதிராக பல தடைகளை விதித்துள்ளது. பெண்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல தடைவிதித்தது. அதன்பின் என்.ஜி.ஓ.-வில் பணிபுரிய தடைவித்தது. பூங்கா, சினிமா மற்றும் பொழுபோக்கு இடங்களில் வேலை செய்ய தடைவித்தது. அந்த வரிசையில் தற்போது காபூல் மற்றும் நாட்டில் உள்ள மற்ற மாகாணங்களில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு (பியூட்டி பார்லர்) தடைவிதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தக்காளி விலை ஏறிக்கொண்டே இருந்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் கோயம்போடு மொத்த விற்பனை காய்கறி சந்தையில் தக்காளி கிலோ ஒன்றிற்கு 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று 10 ரூபாய் அளவில் குறைந்தது. இதனால் சில்லறை விலையில் 120 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் இன்று மொத்த விற்பனை காய்கறி சந்தையில் விலை அதிகரித்து மீண்டும் 100 ரூபாயைத் தொட்டுள்ளது. இதனால் சில்லறை விலையில் 120-க்கும் மேல் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மூத்த மத்திய மந்திரிகளை நேற்று சந்தித்தார். டெல்லி பிரகதி மைதானத்தின் மாநாட்டு அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 20-ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், அதில் கடைப்பிடிக்க வேண்டிய அரசின் நிலைப்பாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    ×