என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் அஜித்பவார், துணை முதல் மந்திரியாக சமீபத்தில் பதவியேற்றார். அஜித் பவார் தரப்பினர் எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டம் இன்று பாந்திராவில் நடந்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் அஜித் பவார் தரப்பினர் மனு அளித்தார்.

    டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தை அமைச்சர் துரைமுருகன் சந்தித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய 9 டி.எம்.சி. தண்ணீரை வழங்கவில்லை. மாத வாரியாக தமிழ்நாட்டிற்கான தண்ணீரை வழங்க, கர்நாடக அரசை அறிவுறுத்த கோரிக்கை விடுத்துள்ளோம். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம். மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் என்றார்.

    மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தை அமைச்சர் துரைமுருகன் இன்று சந்தித்தார். அப்போது காவிரி ஆணைய உத்தரவுபடி காவிரியில் முறைப்படி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறும், மேகதாது அணையை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 1½ வயது குழந்தை கை இழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை குழுவின் அறிக்கை வெளியாகி உள்ளது. அதில், குழந்தைக்கு ரத்தநாள அடைப்பு செலுத்தப்பட்ட மருந்தினாலோ மற்ற சிகிச்சை முறைகளாலோ ஏற்படவில்லை. Pseudomonas கிருமியால் ஏற்படும் மூளைத்தொற்று ரத்த நாளத்தை பாதித்ததால், குழந்தைக்கு வலது கையில் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரை காப்பாற்றும் முயற்சியில் குழந்தையின் வலது கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த வழக்கில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் மூன்றாவது நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சி.வி.கார்த்திகேயனை நியமித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபுர்வாலா உத்தரவிட்டுள்ளார்.

    அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தாமதமாக பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். உள் நோயாளிகள் பிரிவை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வர வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    நாயனசெருவு பகுதியில் கிளினிக் நடத்தி வரும் கோபி என்பவரிடம் சிகிச்சை அளித்தனர். அப்போது கோபிநாத் மாணவனுக்கு தவறுதலாக ஊசி போட்டதாக கூறப்படுகிறது. வீட்டிற்கு சென்றதும் சிறுவன் சூரிய பிரகாசுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் சிறுவன் இறந்தான்.

    மணிப்பூர்: ராணுவ ஆயுதங்களை கொள்ளையடிக்க முயன்ற கும்பல்- ஒருவர் சுட்டுக்கொலைமணிப்பூரில் வன்முறை நீடித்து வரும் நிலையில், ராணுவ பாதுகாப்பு முகாமிற்குள் நுழைந்து ஆயுதங்களை ஒரு கும்பல் கடத்த முயன்றது. இதனால் ஏற்பட்ட மோதலில் ஒருவர் சுட்டு வீழ்த்தப்பட்டார். அசாம் ரைபிள் வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.

    வடகொரியா கடந்த மே மாதம் செலுத்திய செயற்கைக்கோள் நிலைநிறுத்தல் தோல்வியில் முடிந்தது. அதன் பாகங்களை சேகரித்து ஆராய்ந்த தென்கொரியா, அந்த செயற்கைக்கோள் ராணுவ உளவு பணியை மேற்கொள்ளும் திறன் அற்றது எனத் தெரிவித்துள்ளது.

    புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களை போல தமிழ்நாட்டிலும் டெட்ரா பேக் முறையை அமல்படுத்த உள்ளோம். இதன் மூலம் 99 சதவீதம் சேதாரம் இருக்காது. 2 ஆண்டுகளுக்கு உத்தரவாதம் தரப்படுகிறது.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் அஜித் அகர்கரை நியமித்தது.

    ராமநாதபுரம் மாவட்டம் அருகே கழனிக்குடி என்ற பகுதியில் மாடு குறுக்கே வந்ததால் பயணிகளுடன் சென்ற சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ×