என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    திரெட்ஸ் ஆப் அறிமுகம் செய்யப்பட்ட சில நிமிடங்களில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் அதில் இணைந்துள்ளார். அத்துடன், திரெட்ஸ் அப்பில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    உத்தரப் பிரதேசத்தின் புடான், எட்டா மற்றும் ரேபரேலி மாவட்டங்களில் நேற்று மின்னல் தாக்கியதில் இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

    சந்திராயன்-3 விண்கலம் வரும் 14-ம் தேதி மதியம் 2.35 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அறிவித்துள்ளது.

    அரியானாவில் முதியோர், கணவனை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவது போல் திருமணமாகாதவர்களுக்கும் பென்ஷன் அளிக்க முடிவு செய்துள்ளது அம்மாநில அரசு. அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

    தேனி பாராளுமன்ற தொகுதி எம்.பி.யும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவரது கோரிக்கையை ஏற்று, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக, 30 நாட்களுக்கு தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது. 

    அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் 3வது நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு இன்று விசாரணைக்கு வந்தது. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதாட உள்ளதால் இந்த வழக்கை நாளை விசாரணைக்கு ஒத்திவைக்க வேண்டும் என மேகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதால், வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்த நீதிபதி, இருதரப்பும் ஒப்புதல் தெரிவித்தால் வரும் சனிக்கிழமை விசாரிப்பதாக தெரிவித்தார்.

    போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட உள்ள நிலையில் ஆலோசனை நடைபெற உள்ளது.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாரை அரசில் இணைத்ததால், ஷிண்டேவுக்கு சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.-க்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் ஷிண்டே தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தலைவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

    அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி சி.வி.கார்த்திகேயனை மூன்றாவது நீதிபதியாக நியமித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபுர்வாலா உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீது நாளை பிற்பகல 2.15 மணிக்கு விசாரணை நடைபெறுகிறது. ஏற்கனவே, 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில் 3-வது நீதிபதி நாளை விசாரிக்கிறார்.

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. இதில் நான் தெளிவாக இருக்கிறேன். ஆளும் கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியின் மாநில தலைவராக இருந்தாலும் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. ஆளுநர் என்பவர் 6 மாதத்திற்கு ஒருமுறை பத்திரிக்கைக்கு பேட்டி கொடுக்கலாம். அவர் தினம் தினம் என்னைப் போல சந்தித்து பேட்டி கொடுத்தால், அந்த பதவிக்கு மாண்பில்லாமல் போய்விடும் என்றார்.

    மும்பையில் தனது எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டத்தில் தேசியவாத கட்சித் தலைவர் சரத் பவார் பேசுகையில், எங்களுக்கு அதிகாரப் பசி இல்லை; தொடர்ந்து மக்களுக்காக உழைப்போம். நம் வழியில் தடைகள் இருந்தாலும் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். நமது சின்னத்தை யாரும் பறிக்க அனுமதிக்க மாட்டோம். யாரும் கவலைப்பட தேவையில்லை என தெரிவித்தார்.

    ×