என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    சீன அரசு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ஓபன் சோர்ஸ் கம்ப்யூட்டர் ஆபரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. அமெரிக்காவுடனான போட்டி அதிகரித்துள்ள நேரத்தில், வெளிநாட்டு சார்பைக் குறைக்கும் முயற்சியாக இந்த புதிய சிஸ்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஓபன்கிளின் (OpenKylin) என்று அழைக்கப்படும் இந்த இயங்குதளம், உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கக்கூடிய Windows மற்றும் MacOS அமைப்புகளுக்கு போட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    ஒடிசா ரெயில் விபத்தில் 291 பேர் உயிரிழந்ததுடன், 900-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக ரெயில்வே மூத்த பொறியாளர் உள்பட 3 பேரை சி.பி.ஐ. இன்று கைது செய்தது.

    மகளிர் உரிமைத்தொகை திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், செப்டம்பர் 15-ம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்துக்கு கலைஞர் மகளிர்உரிமைத் தொகை திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இத்திட்டம் தமிழக வரலாற்றில் மிகப் பெரிய திட்டம். இந்த மாபெரும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதல் கூட்டம் இது. தலைமுறை தலைமுறையாக பயனளிக்கப் போகும் திட்டம் இது என்றார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் 3வது நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பிலும், செந்தில் பாலாஜி மனைவி சார்பிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், வரும் 11, 12ம் தேதிகளில் விசாரணை நடைபெறும் என மூன்றாவது நீதிபதி தெரிவித்தார்.

    சென்னையில் கடந்த மாதம் வெயில் சுட்டெரித்த நிலையில், திடீரென்று பலத்த மழையும் பெய்தது. இந்த திடீர் தட்ப வெப்ப நிலை மாற்றத்தால் சென்னையில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. பலருக்கு காய்ச்சலுடன் தொண்டைவலி, சளி, இருமல் உள்ளிட்ட உடல்நிலை பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது.

    மேகதாது அணைத்திட்டம் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்த்த நிலையில், மேகதாது அணை கட்ட தேவையான ஒப்புதல் பெற துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். முதல் திட்ட அறிக்கை, சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற மத்திய அரசிடம் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அணைக்கு நிலம் கையகப்படுத்துவதே அரசின் முதன்மை பணி என்றும் கூறியுள்ளார்.மேலும் மேகதாது அணைக்கு நிலம்கொடுக்கும் மக்களுக்கு மாற்று இடத்தில் நிலம் வழங்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

    தமிழக கவர்னருக்கு வேறு வேலை எதுவும் இல்லாததால் அடிக்கடி டெல்லிக்கு சென்று வருகிறார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

    அவுராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்திற்கு பலக்னுமா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இன்று பகலில் ஐதராபாத் அருகே பொம்மைபள்ளி, பகிடிபள்ளி இடையே ரெயில் சென்றபோது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

    குஜராத் ஐகோர்ட் நீதிபதி ஹேமந்த் பிரச்சாக் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    கோவை சரக டிஐஜி விஜயகுமார் தனது பணிக்காலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்குப் பெருமை சேர்த்தவர். அவருடைய இந்த மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பாகும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார். மேலும் தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், தென்காசி, கடையம், கீழப்பாவூர், செங்கோட்டை ஆகிய 5 வட்டாரப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து கலெக்டர் துரைரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

    ஹெட்டிங்லே: ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் போடப்பட்ட 19 ஓவர்களுக்கு 3 விக்கெட்டு இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்துள்ளது.

    ×