என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    சென்னை விமான நிலையத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கர்நாடக அரசால் மேகதாதுவில் அணை கட்ட முடியாது. மேகதாது விவகாரம் குறித்து நாளை காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். அதைத் தொடர்ந்து டெல்லி சென்று காவிரி மேலாண்மை வாரியத்திலும் மேகதாது குறித்து ஆலோசிக்க உள்ளேன் என தெரிவித்தார்.

    நெல்லையில் நடைபெற்ற டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், பால்சி திருச்சி அணிகள் மோதின. முதலில் ஆடிய சேப்பாக் அணி 129 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய திருச்சி அணி 71 ரன்னில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கிற்கு அமலாக்கத்துறை சார்பில் அசோக்குக்கு 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனால், 3-வது முறையாக அசோக்குமார் வருமானவரிதுறை அதிகாரிகள் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். வருகிற 27-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் இன்று பதவி ஏற்றார். இதையடுத்து அஜித் பவார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், " வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி என்ற பெயரில் மட்டுமே போட்டியிடுவோம்" என்று கூறினார்.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1½ வயது குழந்தைக்கு கையில் டிரிப்ஸ் ஏற்றியதில் தவறுதலாக ஊசி போட்டதால் அந்த குழந்தையின் கையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உள்ளனர்.

    மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஆளுநர் ரமேஷ் பைஸ், அஜித் பவாருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    தக்காளி விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் நாளை கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    துவரம் பருப்பு மொத்த விலையில் ரூ.129-க்கு விற்கப்படுகிறது. ஒரு ஆண்டில் மட்டும் 25 சதவீத அளவுக்கு விலை உயர்ந்து உள்ளது. தற்போது சில்லரை விலையில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.150-க்கு விற்கப்படுகிறது.

    சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு கடற்கரை (இ.சி.ஆர்.) சாலை வழியாக முதல்முறையாக மின்சார பஸ் சேவையை தனியார் நிறுவனம் தொடங்கி உள்ளது.

    நாமக்கல் பகுதி வேகமாக வளர்ந்து வரக்கூடிய பா.ஜனதாவுடைய கோட்டையாக மாறிக்கொண்டு இருக்கிறது என்று மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடைபெற்ற 27வது சீனியர் தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு பெண்கள் அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. போட்டியில் வென்ற அணியினர் இன்று தமிழகம் திரும்பினர். வெற்றிக் கோப்பையுடன் வந்த அவர்களுக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தக்காளி விலை இன்று உச்சத்தை எட்டியது. சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று 90 ரூபாய்க்கு விற்ற தக்காளி, இன்று 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் ஒரு கிலோ 130 முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வு காரணமாக, பொதுமக்கள் வழக்கமாக வாங்குவதைவிட குறைந்த அளவே தக்காளியை வாங்கிச் செல்கின்றனர்.

    பெரும்பாலான மக்கள் தக்காளியை சமையலில் குறைக்கத் தொடங்கி உள்ளனர்.

    ×