என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    கரூரில் பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க மாநாடு நடந்தது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசுகையில், கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இந்த ஆண்டு காவிரி நீர் தமிழகத்திற்கு கிடையாது. மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கூறியுள்ளார். எனவே தமிழக முதல்வர் ஸ்டாலின் கர்நாடகாவில் நடக்கும் எதிர்க்கட்சி கூட்டத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்றார்.

    உலகின் மிகப்பெரிய சமூக வலைதளம் டுவிட்டர். உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு மேல் டுவிட்டர் சமூக வலைதளம் முடங்கியதால் கோடிக்கணக்கான பயனாளர்கள் தவித்தனர். முடங்கியிருந்த டுவிட்டர் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்த நிலையில் டுவிட்டர்வாசிகள் மீம்ஸ்களை டுவிட்டரில் தெறிக்கவிட்டனர். மேலும் டுவிட்டர் டவுன் என்ற ஹாஷ் டேக் டிரெண்டானது.

    நெல்லையில் நடைபெற்ற டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய நெல்லை அணி 159 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய திண்டுக்கல் அணி 19.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 100.4 ஓவர்களில் 416 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 76.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 325 ரன்னில் ஆல் அவுட் ஆனது. 4-வது நாளான இன்று தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 279 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    டிஎன்பிஎல் தொடரின் 23வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் மோதின.

    இதில், நெல்லை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது. இதனால், 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி விளையாடி வருகிறது.

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டியில், சூப்பர் 6 தொரின் இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஸ்காட்லாந்து வென்றது. உலகக்கோப்பை தொடரின் முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தது.

    சென்னை கொளத்தூரில் உள்ள ஸ்டீபன் சாலையில் ரூ.66.83 கோடியில் கட்டப்பட்டுள்ள செங்கை சிவம் மேம்லாத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    பவர் பிளேவில் வேகமெடுத்த திருப்பூர் தமிழன்ஸ் ஒரு விக்கெட் இழப்பிற்கு 56 ரன்களை குவித்தது. இதனால் எளிதில் வெற்றி இலக்கை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க திருப்பூர் அணிக்கு நெருக்கடியானது. இதனால் ஆட்டத்தின் முடிவில், திருப்பூர் தமிழன்ஸ் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    டிஎன்பிஎல் போட்டியின் 22வது லீக் ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் சேலம் அணி 20 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை குவித்தது. இதைதொடர்ந்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என் இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

    ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 12 சதவீதம் அதிகரித்து ரூ.1.61 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறைக்கு வந்ததில் இருந்து, மொத்த ஜிஎஸ்டி வசூல் நான்காவது முறையாக ரூ.1.60 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மகாராஷ்டிரா மாநிலம் சம்ருத்தி நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பேருந்து விபத்துக்கு சாலை கட்டுமானம் காரணம் அல்ல என்று மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் முக்கிய துறைகளின் செயலாளர்களை பணி இடம் மாற்றி தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். நகராட்சி துறை நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக ரீட்டா ஹரிஷ் தாக்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    ×