என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில், கூட்டத்தொடர் ஜூலை 20-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் உத்தரவு நிறுத்தி வைப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

    தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் பக்தர் புனித யாத்திரை மேற்கொள்வார்கள். இந்த வருடம் ஜூலை 1 (இன்று) முதல் ஆகஸ்ட் மாதம் 31-ந்தேதி வரை பனி லிங்கத்தை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நேற்று தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் வழியாக ஆளுநர் முதல் குழு பயணத்தை தொடங்கி வைத்தார். இந்த நிலையில் இன்று மத்திய காஷ்மீரில் உள்ள பால்தால் முகாமில் இருந்து முதல் குழு புறப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் யாவத்மால் என்ற இடத்தில் இருந்து புனேவுக்கு சென்ற பேருந்து ஒன்று சம்ருத்தி மகாமர்க் அதிவேக நெடுஞ்சாலையில் பல்தானா என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் 25 பயணிகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    டைமண்ட் லீக் தடகள போட்டி சுவிட்சர்லாந்தின் லாசானே நகரில் நடந்தது. இதில் ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தவரான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா களம் கண்டார். அவர் 87.66 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இதன்மூலம் டைமண்ட் லீக் தடகள போட்டியில் நீரஜ் சோப்ரா 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது. நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று போட்டியை தொடங்கி வைத்து பேசியவர், தமிழகத்தில் மட்டுமே முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நடத்தப்படுகிறது. நம்பர் 1 விளையாட்டு வீரர்களை உருவாக்குவதே நமது இலக்கு என்றார்.

    மணிப்பூரில் கலவரங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் இணையதள சேவைக்கான தடை ஜூலை 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், மணிப்பூரில் ஜூலை 8-ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நீடித்து வரும் கலவரத்தைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளது.

    மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் ஆதரவாளர்களின் கோரிக்கையை ஏற்று ராஜினாமா செய்யும் முடிவை அவர் திரும்பிப் பெற்றுக் கொண்டார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    மணிப்பூர் மாநில கலவரத்திற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ஆளுநரை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மணிப்பூர் பிஷ்னுபுர் மாவட்டம் மொய்ரங் என்ற பகுதியில் உள்ள இரண்டு நிவாரண முகாமிற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பிற்கு பிறகு ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், இதயம் நொறுங்கிவிட்டதாக குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

    மீனை சாப்பிடாதோர் அசைவம் என்றும், சாப்பிடுவோர் சைவம் என்றும் சொல்கின்றனர். எனக்கு பிடித்த உணவு மீன். என்னை பொருத்த வரை மீனை சைவத்தில் சேர்க்கலாம். இதனால் மீனவர்களின் வாழ்வு மேம்படும் என்றார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் கடிதம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆளுநர் கடித விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும், சட்ட ரீதியாக எதிர்கொள்வது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அரசு தலைமை வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

    ×