அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்தார். அவரது பதவி நீக்கத்திற்கு தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவை கவர்னர் ரவி கிடப்பில் போட்டுள்ளார் எனவும், இதுதொடர்பாக இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரிடம் ஆலோசனை கேட்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.