search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெஸ்ட்இண்டீஸ்-வங்காளதேசம் இன்று மோதல் - 2-வது வெற்றி யாருக்கு?
    X

    வெஸ்ட்இண்டீஸ்-வங்காளதேசம் இன்று மோதல் - 2-வது வெற்றி யாருக்கு?

    உலக கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணியிம் மொர்டாசா தலைமையிலான வங்காளதேசம் அணியும் மோதுகின்றன.
    டான்டன்:

    12-வது உலககோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

    19-வது நாளான இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் - மொர் தாசா தலைமையிலான வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் 1 வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற் றுடன் 3 புள்ளிகள் பெற்றுள்ளது. ரன் ரேட்டில் வங்காளதேசத்தை விட வெஸ்ட்இண்டீஸ் முன்னணியில் உள்ளது.

    இதனால் 2-வது வெற்றியை பெற்று முன்னேற்றம் அடையப்போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    வெஸ்ட்இண்டீஸ் அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவிடம் 15 ரன்னிலும், இங்கிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது. தென் ஆப்பிரிக்காவுடன் மோதிய ஆட்டம் மழையால் ரத்து ஆனது.

    வங்காளதேச அணி தென் ஆப்பிரிக்காவை 21 ரன்னில் வீழ்த்தியது. நியூசிலாந்திடம் 2 விக்கெட் வித்தியாசத்திலும், இங்கிலாந்திடம் 106 ரன் வித்தியாசத்திலும் தோற்றது. இலங்கையுடன் மோதிய ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்தது போல வெஸ்ட்இண்டீசுக்கும் அதிர்ச்சி கொடுக்கும் ஆர்வத்தில் வங்காளதேசம் உள்ளது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியை சமீபத்தில் 2 முறை வீழ்த்தி இருந்தது. இதனால் வங்காளதேச அணி நம்பிக்கையுடன் உள்ளது.

    வெஸ்ட்இண்டீஸ் அணியில் கெய்ல், ரஸ்சல், ஹெட்மயர், ஹோப் போன்ற அதிரடி வீரர்கள் இருப்பதால் 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×