என் மலர்
உலகம்

அமெரிக்க அதிபருடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு
- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புளோரிடாவில் அதிபர் டிரம்பை சந்தித்தார்.
- அதிபர் டிரம்ப் ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசினார்.
வாஷிங்டன்:
ரஷியா- உக்ரைன் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 20 அம்சங்கள் அடங்கிய திட்டத்தை பரிந்துரை செய்துள்ளார். இதை ஏற்றுக்கொள்வது தொடர்பாக உக்ரைன்- அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, புளோரிடாவில் டிசம்பர் 28 அன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்க இருப்பதாகவும், இந்தச் சந்திப்பின்போது உக்ரைன் பாதுகாப்பு உத்தரவாதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புளோரிடாவில் இன்று அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்தார். அப்போது இருதரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முன்னதாக, அதிபர் டிரம்ப் ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






