என் மலர்
உலகம்

நேரம் வந்துவிட்டது.. மீண்டும் ரஷியா-இந்தியா-சீனா கூட்டணி.. ரஷிய வெளியறவு அமைச்சர் வலியுறுத்தல்
- யூரேசியா (ஐரோப்பா மற்றும் ஆசியா) பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு சர்வதேச மாநாட்டில் லாவ்ரோ பங்கேற்றார்.
- ரஷியா -இந்தியா-சீனா கூட்டணியின் பணிகளை விரைவில் மீண்டும் தொடங்க விரும்புகிறோம்.
ரஷியா -இந்தியா-சீனா கூட்டணியை மீண்டும் உயிர்ப்பிக்க விரும்புவதாக ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
சீனாவிற்கு எதிரான சதியில் இந்தியாவை ஈடுபடுத்த நேட்டோ கூட்டணி வெளிப்படையாக முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.
ரஷியாவில் நடைபெற்ற யூரேசியா (ஐரோப்பா மற்றும் ஆசியா) பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு சர்வதேச மாநாட்டில் லாவ்ரோ பங்கேற்றார்.
அதில் அவர் பேசியதாவது, "முன்னாள் ரஷ்ய பிரதமர் யெவ்ஜெனி ப்ரிமகோவ் தலைமையில் பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட ரஷியா -இந்தியா-சீனா கூட்டணியின் பணிகளை விரைவில் மீண்டும் தொடங்க விரும்புகிறோம்.
இந்தக் கூட்டணி மூன்று நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டுத் தலைவர்களுடன் 20க்கும் மேற்பட்ட சந்திப்புகளை நடத்தியுள்ளது.
எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இந்தியாவும் சீனாவும் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளன. எனவே, கூட்டணியை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான நேரம் வந்துள்ளது," என்று அவர் கூறினார்.






