என் மலர்tooltip icon

    உலகம்

    டிரம்ப் உத்தரவுகளுக்கு தடைவிதிக்கும் அதிகாரத்தை மாவட்ட நீதிபதிகளிடமிருந்து பறித்த அமெரிக்க உச்சநீதிமன்றம்
    X

    டிரம்ப் உத்தரவுகளுக்கு தடைவிதிக்கும் அதிகாரத்தை மாவட்ட நீதிபதிகளிடமிருந்து பறித்த அமெரிக்க உச்சநீதிமன்றம்

    • முடிவில் பெரும்பான்மை படி மாவட்ட நீதிபதிகளின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன.
    • டிரம்பின் பிறப்பால் குடியுரிமை பெறும் முறையை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிக்கு எதிராக மாவட்ட நீதிபதிகள் தடையாக இருந்தனர்.

    நீதிபதிகள் தன்னிச்சையாக அமெரிக்க அரசின் நிர்வாக நடவடிக்கைகளைத் தடுக்கும் அதிகாரங்களைக் அந்நாட்டு உச்சநீதிமன்றம் குறைத்துள்ளது.

    டிரம்பின் பிறப்பால் குடியுரிமை பெறும் முறையை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிக்கு எதிராக மாவட்ட நீதிபதிகள் விதித்த தடையை எதிர்த்து டிரம்ப் தரப்பு உச்சநீதிமன்றம் சென்றது.

    இதன் விசாரணையில், தனிப்பட்ட மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளால் பிறப்பிக்கப்படும் நாடு தழுவிய தடைகள் அவர்களின் அதிகார வரம்பை மீறியது என்று நீதிமன்றம் கூறியது. எனவே மாவட்ட நீதிபதிகளின் அதிகாரத்தை குறைக்க 6 உச்சநீதிமன்ற நீதிபதிகள் சாதகமாகவும், 3 பேர் எதிராகவும் வாக்களித்தனர். முடிவில் பெரும்பான்மை படி மாவட்ட நீதிபதிகளின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன.

    இது தனக்கு ஒரு மிகப்பெரிய வெற்றி என்றும் இந்த தீர்ப்புக்காக உச்ச நீதிமன்றத்திற்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூற விரும்புகிறேன். இது அரசியலமைப்பைப் மீட்டெடுக்கிறது என்று டிரம்ப் நேற்று பேட்டியளித்தார்.

    பிறப்பால் குடியுரிமை பெறும் முறையை முடிவுக்குக் கொண்டுவருதல், திருநங்கைகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான சிறப்பு இடங்களை அமைக்க நிதி வழங்குவதை நிறுத்துதல் உட்பட தவறாக தடுக்கப்பட்ட பல கொள்கைகளை இப்போது தான் தொடர்வேன் என்று டிரம்ப் கூறினார்.

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக அல்லது தற்காலிக விசாவில் உள்ள பெற்றோர்களுக்குப் பிறந்த குழந்தைகள் தானாகவே குடிமக்களாக ஆக மாட்டார்கள் என்று டிரம்பின் பிறப்பால் குடியுரிமை குறித்த நிர்வாக உத்தரவு வரையறுப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×