என் மலர்
சூடான்
- வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்கு உள்நாட்டு போர் ஏற்பட்டுள்ளது.
- இந்தியர்கள் உள்பட 150 பேரை சவூதி அரேபியா மீட்டு சூடானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றியது.
கார்டூம்:
வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்கு உள்நாட்டு போர் ஏற்பட்டுள்ளது. அங்கு ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பெரும் கலவரம் மூண்டு உள்ளது.
சாலைகளில் துப்பாக்கி சண்டை, குண்டு வீச்சு காரணமாக மக்கள் பீதியில் உள்ளனர். ராணுவம்-துணை ராணுவம் இடையே மோதலில் அப்பாவி மக்கள் உள்பட 413 பேர் பலியாகி இருக்கிறார்கள்.
3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ள சூடானில் இந்தியா, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால் சூடான் தலைநகர் கார்டூமில் உள்ள சர்வதேச விமான நிலையம் கடுமையாக சேதமடைந்து உள்ளது.
இதனால் அங்கிருந்து விமானங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே சூடானில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை மீட்டு கொண்டு வர, ராணுவ துடுப்புகளை அனுப்ப அதிபர் ஜோபைடன் உத்தர விட்டார்.
அதன்படி சூடானுக்கு சென்ற அமெரிக்க ராணுவத்தினர் அங்கிருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினரை பத்திரமாக மீட்டு அழைத்து சென்றனர்.
தலைநகர் கார்டூமில் இருந்து விமானம் மூலம் அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய ராணுவம் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து சென்றது.
சுமார் 70 பேர் வரை மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் எத்தனை பேர் மீட்கப்பட்டனர் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை.
அதேபோல் அவர்கள் எங்கு அழைத்து செல்லப்பட்டனர் என்ற தகவலும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறும்போது, கார்டூமிலில் இருந்து தூதரக ஊழியர்களை விமானம் மூலம் வெளியேற்றும் அமரிக்க ராணுவம் சூடான் வான்வெளியில் இருந்து பாதுகாப்பாக வெளியேறியது என்றனர்.
இதற்கிடையே சூடானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் பணி நிறைவடைந்து உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, எனது உத்தரவின் பேரில் சூடானில் இருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற்றும் பணியை ராணுவம் மேற் கொண்டது.
அப்பணியை ராணுவம் வெற்றிகரமாக முடித்து விட்டது. அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இப்பணிக்கு உதவிய ஜிபூட்டி, எத்தியோப்பியா, சவூதி அரேபியாவுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
சூடானில் நடந்த இந்த துயரமான வன்முறை ஏற்கனவே நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்களின் உயிர்களை பலி கொண்டு உள்ளது. இது மனசாட்சியற்றது. இச்சண்டை நிறுத்தப்பட வேண்டும் என்றார்.
சூடானில் உள்ள அமெரிக்கர்களை ஒருங்கிணைந்து வெளியேற்றும் திட்டம் தற்போது ஏதும் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்தியர்கள் உள்பட 150 பேரை சவூதி அரேபியா மீட்டு சூடானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றியது.
சூடானில் முக்கிய துறைமுகமாக போர்ட் சூடானில் இருந்து கப்பல் மூலம் சவூதி அரேபியாவை சேர்ந்தவர்கள், 91 வெளிநாட்டினர் என சுமார் 150 பேரை ஜெட்டாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
இதில் சவூதி தூதரக அதிகாரிகள் விமான ஊழியர்கள், இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, கனடா, வங்காளதேசம் பிலிப்பைன்ஸ், குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், புர்கினா பாசோ ஆகிய நாட்டை சேர்ந்தவர்கள் அடங்குவர்.
அவர்கள் சவூதி அரேபியா ராணுவ அதிகாரிகளை பூங்கொத்து சாக்லேட் கொடுத்து வரவேற்றனர்.
சூடானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவது குறித்து இந்திய வெளியுறவு மந்திரி ஜெங்சங்கர் சவூதி அரேபிய மந்திரியுடன் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தாக்குதல் நடக்கும் இடங்களில் இருந்து சூடான் நாட்டை சேர்ந்தவர்கள் வெளியேறுகிறார்கள்.
- இந்தியர்கள் எங்கு செல்வது என தெரியாமல் திணறுகிறார்கள்.
கர்த்தூம்:
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் ராணுவத்துக்கும், துணை ராணுவ படைகளுக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நடந்து வருகிறது. தாக்குதல் நடக்கும் இடங்களில் இருந்து சூடான் நாட்டை சேர்ந்தவர்கள் வெளியேறுகிறார்கள்.
ஆனால் அங்கு வசிக்கும் இந்தியர்கள் எங்கு செல்வது என தெரியாமல் திணறுகிறார்கள். உம்துர்மன் நகரில் இந்தியர்கள் சிக்கி உள்ளனர். அங்கு 24 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. போர் நிறுத்தம் இன்று மாலை 6 மணி வரை அமலில் உள்ளது.
இந்த நிலையில் போர் நிறுத்தத்தை மீறி இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் உம்துர்மன் பகுதியில் துணை ராணுவப்படை தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
அங்கு போதுமான பாதுகாப்பு இல்லை, அடிப்படை வசதிகள் இல்லை என்று உம்துர்மன் பகுதியில் வசிக்கும் இந்தியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
- சூடானில் ஏற்பட்ட மோதல் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது.
- இந்த மோதலில் 2,600 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்டோம்:
ராணுவ ஆட்சி நடந்து வரும் சூடானில் ராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஆர்.எஸ்.எப். என்ற துணை ராணுவ படையே ஈடுபட்டு வருகிறது.
தலைநகரான கார்டோமில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் சர்வதேச விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக சமீபத்தில் துணை ராணுவ படை அறிவித்தது.
இதனால் கார்டோமில் ராணுவத்துக்கும், துணை ராணுவ படையினருக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. அதன்பின், இது நாடு முழுவதும் கலவரமாக வெடித்தது. இதில் ஒரு இந்தியர் உள்பட 180 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையே, சூடானில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தியது. வீட்டிற்குள் பாதுகாப்புடன் இருக்கும்படியும், தேவையின்றி வெளியே வரவேண்டாம் என அங்குள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அறிவுறுத்தியது.
இந்நிலையில், சூடானில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தலைநகர் கார்டோம் உள்பட பல்வேறு நகரங்களில் துப்பாக்கிச் சூடு, குண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது. 2,600-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த தகவலை சூடானின் சுகாதார அவசரகால இயக்கங்களுக்கான மையத்தின் அமைச்சகம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
- சூடானில் ஏற்பட்ட வன்முறை காரணமாக கிட்டத்தட்ட 185 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
- 1,800 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்டோம்:
ராணுவ ஆட்சி நடந்து வரும் சூடானில் ராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகளில், ஆர்எஸ்எப் என்ற துணை ராணுவ படையே ஈடுபட்டு வருகிறது.
தலைநகரான கார்டோமில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் சர்வதேச விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக நேற்று முன்தினம் துணை ராணுவ படை அறிவித்தது.
இதனால் கார்டோமில் ராணுவத்துக்கும், துணை ராணுவ படையினருக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. அதன்பின், இது நாடு முழுவதும் கலவரமாக வெடித்தது. இதில் ஒரு இந்தியர் உள்பட 56 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், சூடானில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தலைநகர் கார்டோம் உள்பட பல்வேறு நகரங்களில் துப்பாக்கிச் சூடு, குண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 185 பேர் உயிரிழந்ததாகவும், 1,800-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சூடானில் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
- ராணுவம் மற்றும் துணை ராணுவ தலைவர்கள் இடையிலான அதிகாரப் போட்டியின் ஒரு பகுதியாக மோதல் ஏற்பட்டுள்ளது.
- ராணுவ ஆட்சியை கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்புவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
சூடான் நாட்டில் 2021-ம் ஆண்டு அக்டோபரில் ஏற்பட்ட ராணுவப் புரட்சிக்குப் பின்னர் ராணுவ தலைவர்களே ஆட்சி நடத்தி வந்தனர். இந்நிலையில், ராணுவம் - துணை ராணுவம் இடையே பெரும் மோதல் வெடித்துள்ளது. ராணுவ தளபதியான ஜெனரல் அப்தெல் ஃபத்தா புர்ஹான் மற்றும் துணை ராணுவ படையான விரைவு ஆதரவுப் படையின் தலைவர் ஜெனரல் முகமது ஹம்தான் டகலோ ஆகியோருக்கு இடையிலான அதிகாரப் போட்டியின் ஒரு பகுதியாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
தலைநகர் கர்த்தூமில் அதிபர் மாளிகை, அரசு தொலைக்காட்சி மற்றும் ராணுவ தலைமையகத்தை பிடிக்க இரு தரப்பும் கடுமையாக சண்டையிடுகின்றன. பிற பகுதிகளிலும் மோதல் தீவிரமடைந்து வருகிறது. இரு தரப்பினரும் துப்பாக்கி சண்டை, குண்டு வீச்சில் ஈடுபட்டு வருவதால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது தொடர்கிறது.
சூடான் முழுவதும் ஆங்காங்கே மூன்றாவது நாளாக சண்டை நீடிக்கும் நிலையில், பொதுமக்கள் தரப்பில் உயிரிழப்பு 97 ஆக உயர்ந்துள்ளது. மத்திய கர்த்தூமில் உள்ள விதிகளில் இன்னும் ஏராளமான உடல்கள் மீட்கப்படாமல் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம். அதேசமயம் சண்டையில் ஈடுபடும் படைவீரர்கள் தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.
ராணுவ ஆட்சியை கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்புவதற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகின்றன. சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்தததன் அடிப்படையில், புர்ஹானும் டகலோவும் அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக ஆதரவு அமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்வதற்கு முன்வந்தனர். எனினும், துணை ராணுவம் எப்படி ஆயுதப் படைகளில் ஒருங்கிணைக்கப்படும்? ஒருங்கிணைத்தபின், மொத்த படைகளின் கட்டுப்பாடு யாரிடம் இருக்கும்? என்பது உட்பட முக்கிய விவகாரங்கள் குறித்து ஒப்பந்தத்தில் தெளிவாக இல்லை. இதன் காரணமாகவும், இரண்டு தளபதிகளிடையே பிரச்சனை அதிகரித்ததாலும் ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டது.
- சூடான் நாட்டில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே அங்கு ராணுவம்-துணை ராணுவம் இடையே மோதல் வெடித்துள்ளது.
- சூடானில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்த மோதலில் ராணுவத்தின் கை ஓங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சூடான் நாட்டில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே அங்கு ராணுவம்-துணை ராணுவம் இடையே மோதல் வெடித்துள்ளது.
இரு தரப்பினரும் துப்பாக்கி சண்டை, குண்டு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள். தலைநகர் ஹர்டோமில் உள்ள அதிபர் மாளிகை, சர்வதேச விமான நிலையத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக துணை ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனால் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையேயான மோதல் தீவிரம் அடைந்தது. நாடு முழுவதும் பெரும் கலவரம் பரவியுள்ளது. இந்த மோதலில் இந்தியர் உள்பட 56 பேர் உயிரிழந்தனர். 600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில் துணை ராணுவ படை தளங்களை குறி வைத்து ராணுவம் வான்வழி தாக்குதல்களை நடத்தியது. அந்த படை தளங்கள் மீது குண்டு வீசப்பட்டன.
ஹர்டோமில் உள்ள நைல் ஆற்றின் குறுக்கே துணை ராணுவத்தின் ஆர்.எஸ்.எப். தளம் மீது பீரங்கிகள் மற்றும் போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன.
அதே போல் கபூரி, ஷார்க் எல்-நில மாட்டங்களில் துணை ராணுவ தளங்கள் தாக்கப்பட்டன.
இதனால் சூடானில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்த மோதலில் ராணுவத்தின் கை ஓங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்கிடையே காயம் அடைந்தவர்களை வெளியேற்றுவது உள்ளிட்டவற்றுக்காக மனிதாபிமான அடிப்படையில் ஒரு மணி நேரம் சண்டை நிறுத்தத்துக்கு ராணுவமும், துணை ராணுவமும் ஒப்புதல் அளித்து உள்ளது.
- ராணுவம்-துணை ராணுவம் இடையேயான கடும் சண்டையில் பொதுமக்கள் உள்பட 56 பேர் பலியாகி உள்ளனர்.
- சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
ஹர்டோம்:
சூடானில் ராணுவம்-துணை ராணுவம் இடையேயான கடும் சண்டையில் பொதுமக்கள் உள்பட 56 பேர் பலியாகி உள்ளனர். 500 பேர் காயம் அடைந்துள்ளனர். அங்கு தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.
சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ராணுவ வாகனங்கள், வீரர்கள் சாலைகளில் சுற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் சூடானில் ராணுவத்திற்கும்-துணை ராணுவத்திற்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் இந்தியர் ஒருவர் பலியாகியுள்ளார்.
தால் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஆல்பெர்ட் அகஸ்டின் என்ற இந்தியர் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து சூடானில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், சூடானில் உள்ள அனைத்து இந்தியர்களும் மிகுந்த முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ராணுவ தளங்கள் மீது துப்பாக்கி சூடு, குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தது.
- போர் விமானங்கள் பறந்ததால் மக்கள் கடும் பீதியில் உள்ளனர். தலைநகரில் உள்ள விமான நிலையம், அதிபர் மாளிகை ஆகியவற்றிலும் தாக்குதல் நடந்தது.
ஹர்டோம்:
வடகிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான சூடானில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கூட்டணி அரசு கவிழ்க்கப்பட்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது.
இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதி ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அதே போல் ஆட்சியின் துணை தலைவராக துணை ராணுவ படை தளபதி ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ உள்ளார்.
இதற்கிடையே துணை ராணுவ படை பிரிவான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதி முயற்சி மேற்கொண்டார். இதற்கு துணை ராணுவப்படை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ராணுவ தளங்கள் மீது துப்பாக்கி சூடு, குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தது.
துணை ராணுவத்தின் அதிவிரைவு ஆதரவு படை (ஆர்.எஸ்.எப்.) தளங்களை குறி வைத்து ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனால் தலைநகர் ஹர்டோமில் பதற்றம் நீடித்து வருகிறது.
போர் விமானங்கள் பறந்ததால் மக்கள் கடும் பீதியில் உள்ளனர். தலைநகரில் உள்ள விமான நிலையம், அதிபர் மாளிகை ஆகியவற்றிலும் தாக்குதல் நடந்தது.
விமான நிலையத்தில் சவுதி அரேபியாவுக்கு புறப்பட தயாராக இருந்த பயணிகள் விமானம் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. இது தொடர்பாக சவுதி அரேபியா கூறும்போது, ஏர்பஸ் ஏ330 விமானம் ரியாத்துக்கு புறப்படுவதற்கு முன்பு துப்பாக்கி சூட்டில் சேதம் அடந்தது. அனைத்து பயணிகள், விமான ஊழியர்களும் சூடானில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்துக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர் என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ராணுவம்-துணை ராணுவம் இடையேயான கடும் சண்டையில் பொதுமக்கள் உள்பட 56 பேர் பலியாகி உள்ளனர். 500 பேர் காயம் அடைந்துள்ளனர். அங்கு தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.
சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ராணுவ வாகனங்கள், வீரர்கள் சாலைகளில் சுற்றி வருகிறார்கள்.
இதற்கிடையே சூடானில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், சூடானில் உள்ள அனைத்து இந்தியர்களும் மிகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்க கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
வீட்டுக்குள்ளேயே இருக்கவும் வெளியில் செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அமைதியாக இருந்து மறு தகவலுக்கு காத்திருக்க கேட்டுக கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளது.
- சூடான் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே மோதல் வெடித்தது.
- இருதரப்பினர் இடையே துப்பாக்கிச் சூடு நடந்து அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
கார்டோம்:
சூடான் தலைநகர் கார்டோமில் அந்நாட்டு ராணுவத்துக்கும் துணை ராணுவப்படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது.
துணை ராணுவக் குழுவினரின் சமீபத்திய நடவடிக்கைகள் ஒருங்கிணைப்பு இல்லாமல் நடந்ததாகவும், அவை சட்டவிரோதமானவை எனவும் ராணுவம் கூறியிருந்தது. இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்து, அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.
இந்நிலையில், சூடானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சூடானின் பல்வேறு பகுதிகளில் மோதல்கள் தொடர்கின்றன. எனவே சூடானில் வசிக்கும் இந்தியர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். வெளியே நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பாக இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளது.
- ஆப்பிரிக்க நாடான சூடானில் பல்வேறு தங்க சுரங்கங்கள் உள்ளன.
- இடிபாடுகளில் சிக்கி கொண்டிருந்த சுரங்க தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
கார்டூம்:
ஆப்பிரிக்க நாடான சூடானில் பல்வேறு தங்க சுரங்கங்கள் உள்ளன. வடக்கு சூடான் பகுதியில் உள்ள ஒரு தங்க சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தபோது திடீரென அந்த சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்தது. இதில் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.
இது குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் அங்கு இடிபாடுகளில் சிக்கி கொண்டிருந்த சுரங்க தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பல தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- சிறுவர்கள் கையில் வைத்திருந்த மர்ம பொருள் உள்நாட்டு போரின் போது வீசப்பட்ட வெடிக்காத சக்திவாய்ந்த வெடிகுண்டு என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
- விளையாட சென்ற இடத்தில் குண்டு வெடித்து 11 சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கார்டூம்:
வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானின் பாகர் அல் ஹசால் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு மர்ம பொருள் அருகே கிடந்தது. இதனை பார்த்த சிறுவர்கள் அதனை தங்களது கையில் எடுத்து விளையாட ஆரம்பித்தனர். அப்போது அந்த மர்ம பொருள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி சென்று பார்த்தனர். அப்போது விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து அவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அதில் 11 சிறுவர்கள் செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். ஒரு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் சிறுவர்கள் கையில் வைத்திருந்த மர்ம பொருள் உள்நாட்டு போரின் போது வீசப்பட்ட வெடிக்காத சக்திவாய்ந்த வெடிகுண்டு என்பதும், அதனை அறியாத சிறுவர்கள் கையில் வைத்து விளையாடியதால் இந்த விபரீதம் ஏற்பட்டதும் தெரிய வந்தது.
விளையாட சென்ற இடத்தில் குண்டு வெடித்து 11 சிறுவர்கள் பலியான சம்பவம் அந்த கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
சூடானில் கடந்த 2013-ல் உள்நாட்டு போர் தொடங்கியது. தொடர்ந்து 5 ஆண்டுகள் நீடித்த இந்த போரில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்த காலகட்டத்தில் ஏராளமான வெடிகுண்டுகள் அங்கு வீசப்பட்டன. அந்த வெடிகுண்டுகள் வெடித்து அவ்வப்போது இது போன்ற கொடூர சம்பவங்கள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.
- இந்த விவகாரம் அங்கு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
- வீடியோ வெளியிட்ட 6 பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜூபா :
ஆப்பரிக்க நாடான தெற்கு சூடான், 2011-ம் ஆண்டு சூடானிடம் இருந்து விடுதலை பெற்றது முதல் அந்த நாட்டின் அதிபராக இருந்து வருபவர் சல்வா கீர். இவர் கடந்த மாதம் தலைநகர் ஜூபாவில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியில் அந்த நாட்டின் தேசிய கீதம் பாடப்பட்டது.
அதிபர் சல்வா கீர் மார்பில் கை வைத்தபடி நின்று தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்திக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு சிறுநீர் வந்த நிலையில், நின்றபடியே தனது ஆடையிலேயே சிறுநீர் கழித்தார்.
இது நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த அரசு ஊடகத்தின் கேமராக்களில் பதிவானது. ஆனால் அரசு ஊடகம் அதனை ஒளிப்பரப்பவில்லை.
இந்த நிலையில் சம்பவம் நடந்த பல நாட்களுக்கு பிறகு அதிபர் சல்வா கீர் தனது ஆடையிலேயே சிறுநீர் கழித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலானது. வீடியோவை பார்த்த பலரும் அதிபரின் உடல் நிலை குறித்து விமர்சனங்களையும் கேள்விகளையும் முன்வைத்து வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் அங்கு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதனையடுத்து, வீடியோ வெளிட்டதாக கூறி அரசு ஊடகத்தில் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அந்த நாட்டின் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு குழு கைது செய்யப்பட்டுள்ள 6 பத்திரிகையாளர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறத்தியுள்ளது.






