என் மலர்
இலங்கை
- ஏப்ரல் 3-ந்தேதி எதிர்ப்புக்கு பயந்து ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே ராஜினாமா செய்தார்.
- மே 9-ந்தேதி மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் விலகினார். தற்போது அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலகுகிறார்.
ஈழத் தமிழர்களை அழித்த ராஜபக்சே குடும்பத்தினர் கடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்ததும், இனி தங்களை யாரும் தட்டி கேட்க முடியாது என்ற ஆணவத்துடன் செயல்படத் தொடங்கினார்கள்.
அண்ணன் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியிலும், தம்பி கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியிலும் அமர்ந்து கொண்டு ஆட்டம் போட்டனர். அவர்களது குடும்பத்தினர் மந்திரிகளாகவும், அரசின் உயர்துறைகள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அதிகார மையங்களாகவும் மாறி இருந்தனர்.
அவர்கள் செய்த தவறுகளும், சொத்து குவிப்பும் மிக விரைவில் வெட்ட வெளிச்சத்துக்கு வந்து இலங்கை மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் அதிபர் கோத்தபய ராஜபக்சே மிகப்பெரிய தவறு ஒன்றை செய்தார்.
அன்னிய செலாவணி விஷயத்தில் தவறான முடிவுகளை எடுத்தார். அதோடு அரசின் அனைத்து துறைகளிலும் கொள்கை முடிவுகள் எடுப்பதற்கு தனக்கு நம்பிக்கைக்குரிய ராணுவ அதிகாரிகளை நியமித்தார்.
ராணுவ அதிகாரிகளை அவர் மலைபோல நம்பி பல அதிகாரங்களை ஒப்படைத்தார். ஆனால் அந்த ராணுவமே அவருக்கு எதிராக திரும்பியதால் தான் ராஜபக்சே குடும்பத்தினர் இன்று நாட்டைவிட்டே ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
தவறான பொருளாதார கொள்கை முடிவுகளால் நாட்டில் முதலில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அடுத்து சீனாவை முழுமையாக நம்பி மற்ற நாடுகளை பகைத்துக்கொண்டு செயல்பட்டது. அடுத்து தொலைநோக்கு பார்வையில்லாமல் கோத்தபய ராஜபக்சே எடுத்த முடிவுகள் பொருளாதாரத்தை மீட்க முடியாத நிலைக்கு கொண்டு சென்று விட்டது.
இந்த ஆண்டு தொடக்கத்திலேயே இலங்கை தள்ளாடித் தொடங்கியது. ஜனவரி, பிப்ரவரி மாதத்தை பொறுத்து பார்த்த மக்கள் மார்ச் மாதம் வீதிக்கு வந்து போராடத்தொடங்கினர். மார்ச் 31-ந்தேதி கொழும்பில் முதலில் போராட்டம் ஆரம்பித்தது.
ஏப்ரல் 3-ந்தேதி எதிர்ப்புக்கு பயந்து ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே ராஜினாமா செய்தார். மே 9-ந்தேதி மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் விலகினார். தற்போது அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலகுகிறார்.
ஈழத் தமிழர்களுக்கு எதிராக இவர்கள் செய்த அட்டூழியம் பாவமாக மாறி இன்று அவர்களை நாட்டை விட்டே துரத்தியுள்ளது. இதனால்தான் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு துரத்தப்பட்டதும், ஈழத் தமிழர்கள் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட தொடங்கிவிட்டனர்.
- இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலகும் பட்சத்தில் ஒரு வாரத்துக்குள் தற்காலிக அதிபர் பதவி ஏற்க வேண்டும்.
- இலங்கை பாராளுமன்றம் 3 நாட்களில் கூடி இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.
இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே மக்களால் அடித்து விரட்டப்பட்டுள்ளார். அவர் வருகிற 13-ந்தேதி அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இதையடுத்து இலங்கையில் அடுத்து என்ன அரசியல் மாற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கே விலகியிருப்பதால் இலங்கையின் அடுத்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் யார் என்பதை அறிய இலங்கை மக்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
இது தொடர்பாக நேற்று மாலையில் இருந்து இலங்கை சபாநாயகர் மகிந்த யப்பா அபவக்தனே தலைமையில் அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்கள் நடந்தபடி உள்ளது. மகிந்த யப்பா இடைக்கால அதிபர் பொறுப்பை ஏற்பார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் அவர் பிரதமர் பதவியை ஏற்கக்கூடும் என்று மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் இன்று மதியம் இலங்கை அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. இலங்கையில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டாட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்காக இலங்கையில் உள்ள ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி மற்றும் சிறிய கட்சிகள் கொண்ட சிறப்பு கூட்டம் இன்று பிற்பகல் கொழும்பில் நடக்கிறது. அதில் கூட்டாட்சிக்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலகும் பட்சத்தில் ஒரு வாரத்துக்குள் தற்காலிக அதிபர் பதவி ஏற்க வேண்டும். இலங்கை பாராளுமன்றம் 3 நாட்களில் கூடி இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். அதன்பிறகு 30 நாட்களில் நிரந்தர அதிபர் தேர்வு செய்யப்பட வேண்டும்.
இதற்கிடையே பிரதமரையும் இதே முறையில் ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்ய இலங்கை தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். இதனால் இலங்கை அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
கூட்டாட்சியை ஏற்படுத்துவதற்காக அமைச்சர்கள் ஒவ்வொருவராக பதவியை ராஜினாமா செய்து வருகிறார்கள்.
- கோத்தபய ராஜபக்சேவின குடும்பத்தினர் ரூபாய் நோட்டுக்களை அந்த அறைக்குள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
- ரூபாய் நோட்டுக்கள் பாதுகாப்பு படையினர் வசம் ஒப்படைக்கப்பட்டதாக கொழும்பில் இருந்து வெளியாகும் டெய்லி மிரர் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போராட்டக்காரர்கள் விடிய விடிய அங்கேயே தங்கி இருந்தனர். இன்று காலை அங்குள்ள குளியல் அறைகளிலும், நீச்சல் குளத்திலும் குளித்து மகிழ்ந்தனர்.
அதன்பிறகு அவர்களுக்கு காலை உணவு அதிபர் மாளிகைக்கு உள்ளே வழங்கப்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் ஒவ்வொரு அறையாக சென்று பார்த்தனர்.
பெரும்பாலானவர்கள் அதிபர் மாளிகை அரங்குகளுக்குள் தரையில் சொகுசாக படுத்துக் கொண்டு டி.வி. பார்த்தபடி இருந்தனர். சிலர் அதிபர் மாளிகையில் என்னென்ன வசதிகள் இருப்பது என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போதுதான் அதிபர் மாளிகைக்குள் சுரங்க அறைகள் இருப்பது தெரியவந்தது. அந்த சுரங்க அறைகள் நவீன வசதிகளுடன் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கிடையே அதிபர் மாளிகையின் சில அறைகள் மூடப்பட்டு இருந்தன. அவற்றை உடைத்து திறந்து பார்த்தனர். அந்த அறைகளுக்குள் நகைகளும், பணமும் இருந்தன.
ஒரு அறையில் கட்டுக் கட்டாக இலங்கை ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. கோத்தபய ராஜபக்சேவின குடும்பத்தினர் ரூபாய் நோட்டுக்களை அந்த அறைக்குள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
போராட்டக்காரர்கள் அந்த ரூபாய் நோட்டு கட்டுக்களை போட்டி போட்டு அள்ளினார்கள். பிறகு அவை எண்ணப்பட்டன. அந்த ரூபாய் நோட்டுக்கள் பல லட்சம் ரூபாய் மதிப்பு கொண்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
பிறகு அந்த ரூபாய் நோட்டுக்கள் பாதுகாப்பு படையினர் வசம் ஒப்படைக்கப்பட்டதாக கொழும்பில் இருந்து வெளியாகும் டெய்லி மிரர் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இலங்கையில் அரசியல் மாற்றம் செய்து பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
- அதற்கேற்ப புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கி உள்ளன.
கொழும்பு:
இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தினர் செய்த தவறான கொள்கை முடிவுகளால் அந்த நாடே மிகப்பெரிய பொருளாதார சீரழிவுகளில் சிக்கி தவித்துக் கொண்டு இருக்கிறது.
அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் போன்றவை சுத்தமாக இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. பால், அரிசி போன்றவற்றில் விலை விண்ணை முட்டும் அளவுக்கு சென்று விட்டதால் மக்கள் கடும் அதிருப்தியும், ஆத்திரமும் அடைந்தனர்.
பொருளாதார சீரழிவால் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பட்டினி கிடக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் இலங்கையில் கடந்த மே மாதம் மிகப்பெரிய புரட்சி வெடித்தது. மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் தெருக்களில் திரண்டு கலவரத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக கடந்த மே மாதம் 9-ந்தேதி இலங்கை முழுவதும் கலவரம் வெடித்து தீப்பற்றி எரிந்தது. ராஜபக்சே குடும்பத்தினர் அரசு பொறுப்புகளில் இருந்து விலக வேண்டும் என்று நாட்டின் அனைத்து துறை மக்களும் கோஷம் எழுப்பினார்கள். நாளுக்கு நாள் இந்த கோரிக்கையும், போராட்டமும் வலுத்தது.
இதையடுத்து மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அவருக்கு பதில் ரனில் விக்கிரமசிங்கே புதிய பிரதமராக பதவி வகித்தார். என்றாலும் ரனில் விக்கிரமசிங்கேயாலும் இலங்கையில் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியவில்லை. அவரும் கடுமையாக திணறினார்.
இந்த நிலையில் அதிபர் பதவியில் மட்டும் மகிந்த ராஜபக்சேயின் தம்பியான கோத்தபய ராஜபக்சே இருந்து வந்தார். அவர் மீது தான் மக்கள் கடும் கோபத்தில் இருந்தனர். கடந்த சில வாரங்களாக மக்கள் நீறுபூத்த நெருப்பாகவே இருந்து வந்தனர்.
இந்த நிலையில் இலங்கையில் 2 நாட்களுக்கு யாருக்கும் எரிபொருள் கிடையாது என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இது மக்களிடையே மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தியது. அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சேவை விரட்டினால்தான் நாட்டை காப்பாற்ற முடியும் என்று இலங்கை முழுவதும் பிரசாரம் செய்யப்பட்டது.
இலங்கை அரசு ஊழியர்கள், ராணுவத்தின் ஒரு பிரிவினர், புத்த மத குருக்கள், பல்வேறு தன்னார்வ அமைப்புகள் நேற்று முன்தினம் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. இதை ஏற்று நேற்று காலை கொழும்பில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பஸ், ரெயில்களில் போராட்டக்காரர்கள் கொழும்பு வந்தனர்.
நேற்று பிற்பகல் அவர்கள் ஒன்று திரண்டு அதிபர் மாளிகை நோக்கி சென்றனர். ராணுவ வீரர்கள் அவர்களை கலைக்க கண்ணீர்புகை குண்டுகளை வீசினார்கள். தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். ஆனால் அதையெல்லாம் முறியடித்துவிட்டு மக்கள் அதிபர் மாளிகைக்குள் புகுந்தனர்.
அதே சமயத்தில் ஜனாதிபதி அலுவலகத்துக்குள்ளும் ஒரு பிரிவினர் புகுந்தனர். சில மணி நேரத்துக்குள் கோத்தபய ராஜபக்சேயின் வீட்டையும், அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் கைப்பற்றினார்கள். அங்கிருந்த பொருட்கள் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டன.
ராணுவத்தினர் அவர்களை விரட்டி தடியடி நடத்தினார்கள். இதில் சுமார் 100 பேர் காயம் அடைந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்களில் 2 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தடியடி நடத்தப்பட்டாலும் மக்கள் கலைந்து செல்லவில்லை.
அதிபர் மாளிகையை முழுமையாக கைப்பற்றிய மக்கள் கோத்தபய ராஜபக்சேவின் படுக்கை அறை, சமையல் அறை, ஆலோசனை கூடம் ஆகியவற்றுக்கு சென்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அதிபரின் மாளிகைக்குள் உள்ள நீச்சல் குளத்தில் இளைஞர்கள் குளித்து மகிழ்ந்தனர். கோத்தபய ராஜபக்சேவின் சொகுசு கார்களை சில இளைஞர்கள் எடுத்து ஓட்டி பார்த்தனர்.
அதிபர் மாளிகைக்குள் நுழைந்த இலங்கை மக்கள் அங்கேயே இருக்கப்போவதாக அறிவித்தனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கேட்டுக்கொண்ட பிறகும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. விடிய விடிய மக்கள் அதிபர் மாளிகையில் இருந்து கும்மாளமிட்டனர்.
அதே சமயத்தில் கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் இரவு முழுக்க போராட்டம் நடந்தது. சில இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் நடந்தன. போராட்டக்காரர்களை போலீஸ்காரர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2-வது நாளாக கொழும்பில் போராட்டம் நடந்தது. மக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு பல்வேறு தெருக்களிலும் அணிவகுத்து வந்து கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக கோஷமிட்டனர். சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்தன.
இலங்கையில் அரசியல் மாற்றம் செய்து பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். எனவே அதற்கேற்ப புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கி உள்ளன. என்றாலும், மக்கள் வரலாறு காணாத வகையில் புரட்சிகரமாக லட்சக்கணக்கில் திரண்டதால் கொழும்பில் தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது.
ரணில் விக்கிரமசிங்கே வீட்டை தீ வைத்து எரித்தது போல மற்ற தலைவர்களின் வீட்டையும் பொதுமக்கள் சூறையாடிவிடக் கூடாது என்ற பயம் அரசியல்வாதிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் அமைச்சர்கள் ஒவ்வொருவராக ராஜினாமா செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக இலங்கையில் அரசியல் நெருக்கடி உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
- அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ரணில் விலகல்.
- இலங்கை தற்காலிக அதிபராக சபாநாயகர் அபேவர்தன செயல்படுவார் என தகவல்
கொழும்பு:
சுமார் 2 கோடியே 20 லட்சம் மக்கள் தொகையை கொண்ட இலங்கையில் கடந்த 70 ஆண்டுகளாக இல்லாத வகையில், பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் அத்தியாவசிய உணவு பொருட்கள் விலையேற்றம் மற்றம் பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு உள்பட பல்வேறு சூழல்களால் அந்நாட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
இதையடுத்து மக்கள் நடத்தி வரும் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் பொருட்களை கைப்பற்றியுள்ளதுடன் அங்கேயே தங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ரணில் விக்ரமசிங்கேவின் தனிப்பட்ட இல்லத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அதற்கு முன்னதாக ரணில் அந்த வீட்டில் இருந்து பாதுகாப்பாக வெளியேறி உள்ளார். போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அங்கு பதற்றம் நீடிக்கிறது.
முன்னதாக நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே விலக வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து ரணில் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதேபோல் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அதிபர் பதவியில் இருந்து விலகுமாறு கோத்தபய ராஜபக்சேவை வலியுறுத்தி சபாநாயகர் அபேவர்தன கடிதம் எழுதினார்.

அதற்கு பதில் அளித்துள்ள கோத்தபய, வரும் 13ந் தேதி பதவி விலகுவதாக தெரிவித்துள்ளதாக அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தற்காலிக அதிபராக சபாநாயகர் அபேவர்தன செயல்பட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே, கொழும்புவில் ரணில் விக்கிரமசிங்கேவின் தனிப்பட்ட இல்லம் அருகில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற இலங்கையின் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் போலீஸ் அதிரடிப்படையினரால் தாக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த நான்கு ஊடகவியலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்வம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள ரணில் விக்ரமசிங்கே, இலங்கையின் ஜனநாயகத்திற்கு ஊடக சுதந்திரம் மிகவும் முக்கியமானது. வன்முறையையும் தடுப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், நிதானத்துடன் செயல்படுமாறு பாதுகாப்புப் படையினரையும் எதிர்ப்பாளர்களையும் கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
- அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலக கோரி அவர்களது இல்லங்களை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.
- போராட்டத்தின் எதிரொலியாக ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
கொழும்பு:
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். மக்களின் போராட்டத்தால் ராஜபக்சே குடும்பத்தினருக்கு கடும் எதிர்ப்பு தொடர்ந்தது. இதனால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததால், புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார்.
அதிபர் பதவியை ராஜினாமா செய்ய கோத்தபய ராஜபக்சே மறுத்துவிட்டதால் அவருக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்தபடி இருக்கிறது.
பொருளாதார நெருக்கடி தீராததால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் எதிர்ப்பு கிளம்பியது. அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் பதவி விலக கோரி இன்று தலைநகர் கொழும்பில் பொதுமக்கள் சார்பில் போராட்டம், பிரமாண்ட பேரணி நடந்தது.
கொழும்புக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்ட்த்திலும் பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதற்கிடையே, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மக்கள் நலன் கருதி பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இல்லத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்கேவின் தனிப்பட்ட இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் பொருட்களை உடைத்து தீ வைத்ததாக இலங்கை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் முயற்சித்தனர்.
- இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் ரணில் பதவி விலக கோரி கொழும்பில் பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடந்தது.
- பிரதமர் மற்றும் அதிபர் இல்லங்களை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.
கொழும்பு:
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வரும் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு பொறுப்பில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக போராட்டம் தொடர்ந்தது. இதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததால் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார்.
பொருளாதார நெருக்கடி தீராததால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் எதிர்ப்பு கிளம்பியது. அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் பதவி விலக கோரி இன்று தலைநகர் கொழும்பில் பொதுமக்கள் சார்பில் போராட்டம், பிரமாண்ட பேரணி நடந்தது.
கொழும்புக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது.
இதற்கிடையே, அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது அதிகாரப்பூர்வ மாளிகையைவிட்டு நேற்று இரவே ராணுவ தலைமையகத்திற்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியது.
மேலும், சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்ட்த்திலும் பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மக்கள் நலன் கருதி ராஜினாமா செய்துள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
- இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் ரணில் பதவி விலக கோரி கொழும்பில் பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடந்தது.
- இதனால் சாலைகளில் ராணுவத்தினர், போலீசார் குவிக்கப்பட்டனர்.
கொழும்பு:
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வரும் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு பொறுப்பில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக போராட்டம் தொடர்ந்தது. இதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததால் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். ஆனால் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அவருக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்தபடி இருக்கிறது. மேலும் பொருளாதார நெருக்கடி தீராததால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் எதிர்ப்பு கிளம்பியது.
அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் பதவி விலக கோரி இன்று தலைநகர் கொழும்பில் பொதுமக்கள் சார்பில் போராட்டம், பிரமாண்ட பேரணி அதிபர் மாளிகை அருகே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் சாலைகளில் ராணுவத்தினர், போலீசார் குவிக்கப்பட்ட னர்.
கொழும்புக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை அருகே முன்னேறிச் சென்றனர். அங்கு தடுப்பு வேலிகளை அமைத்து ராணுவத்தினர், போலீசார் அரணாக நின்றனர். தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர்.
இதற்கிடையே, அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது அதிகாரப்பூர்வ மாளிகையைவிட்டு நேற்று இரவே ராணுவ தலைமையகத்திற்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில், அதிபர் மாளிகையை தொடர்ந்து போராட்டக்காரர்கள் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் அலரி மாளிகையிலும் நுழைந்தனர். அவர்கள் பிரதமர் பதவி விலக வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
- அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது அதிகாரப்பூர்வ மாளிகையைவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.
- அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் உள்ளே இருந்தபடி முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.
கொழும்பு:
இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியை, பதவியில் உள்ள ராஜபக்சே குடும்பம் சரியாக கையாளவில்லை எனக் கூறி பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். ஆனால் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அவருக்கு எதிராக போராட்டங்கள் தொடர்கின்றன.
இதன் உச்சகட்டமாக அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக கோரி இன்று தலைநகர் கொழும்பில் போராட்டம் தீவிரமாக நடைபெறுகிறது. ஊரடங்கு உத்தரவை மீறி நடந்த இந்த போராட்டத்தின்போது போலீசார்- போராட்டக்காரர்கள் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஒருகட்டத்தில் போலீசார் அமைத்த தடுப்பு வேலிகளை தகர்த்த போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் அதிரடியாக நுழைந்தனர். ஆனால் அதற்கு முன்னதாகவே, அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது அதிகாரப்பூர்வ மாளிகையைவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். அவர் நேற்று இரவே ராணுவ தலைமையகத்திற்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கோத்தபய ராஜபக்சேவின் லக்கேஜ்கள், கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கடற்படை கப்பலில் ஏற்றப்படுவதாக கூறி ஒரு வீடியோ வெளியானது.
Protestors taking a dip in the pool at President's House. pic.twitter.com/7iUUlOcP6Z
— DailyMirror (@Dailymirror_SL) July 9, 2022
அதிபர் மாளிகையில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கார்களை வீடியோ எடுத்து போராட்டக்காரர்கள் வெளியிட்டுள்ளனர். இதேபோல் அங்குள்ள நீச்சல் குளத்தில் போராட்டக்காரர்கள் குளிப்பது மற்றும் சமையல் அறைக்கு சென்று சாப்பிடுவது போன்ற வீடியோவும் வெளியாகி உள்ளது. அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் உள்ளே இருந்தபடி அதிபர் பதவி விலக வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர். இன்று அதிபர் மாளிகையில் தங்கப் போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் அனைவரும், போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியை கைவிட்டதாகவும், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக திரும்பியதாகவும் கூறப்படுகிறது.
கொழும்பு நோக்கி பொதுமக்கள் தொடர்ந்து படையெடுத்தவண்ணம் உள்ளனர். இதனால் தலைநகரை கைப்பற்ற திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே அதிபர் பதவியை ராஜினாமா செய்யுமாறு ஆளுங்கட்சி எம்.பி.க்கள் கோத்தபய ராஜபக்சேவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று இரவே தப்பிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
- அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது பற்றி ஆலோசிக்க அவசர கூட்டத்துக்கு ரணில் விக்ரமசிங்கே ஏற்பாடு.
இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணததால் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி எதிர்க்கட்சியினர், கிரிக்கெட் வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, கொழும்புக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை அருகே முன்னேறி சென்றனர். அங்கு தடுப்பு வேலிகளை அமைத்து ராணுவத்தினர், போலீசார் அரணாக நின்றனர். தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். இதனால், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது அதிகாரப்பூர்வ மாளிகையைவிட்டு தப்பியோடியுள்ளார். அவர் நேற்று இரவே தப்பியோடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், இலங்கை பாராளுமன்ற அவசர கூட்டத்தை கூட்ட சபாயாகரிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது பற்றி ஆலோசிக்க அவசர கூட்டத்துக்கு ரணில் விக்ரமசிங்கே ஏற்பாடு செய்துள்ளார்.
- போராட்டத்தில் பங்கேற்க ஆயிரக்கணக்கானோர் தடையை மீறி கொழும்புக்கு திரண்டு வந்ததால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
- அவர் நேற்று இரவே ராணுவ தலைமையகத்திற்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அவதியடைந்து வரும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு பொறுப்பில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக போராட்டம் தொடர்ந்தது.
இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததால் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். ஆனால் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
அவருக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்தபடி இருக்கிறது. மேலும் பொருளாதார நெருக்கடி தீராததால் பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவுக்கும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்தநிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரம சிங்கே பதவி விலக கோரி இன்று தலைநகர் கொழும்பில் பொதுமக்கள் சார்பில் போராட்டம், பிரமாண்ட பேரணி அதிபர் மாளிகை அருகே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
போராட்ட அறிவிப்பு காரணமாக கொழும்பு முழுவதும் நேற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சாலைகளில் ராணுவத்தினர், போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆனால் ஊரடங்கை மீறி நேற்று நள்ளிரவு முதல் மக்கள் கொழும்பை நோக்கி படையெடுத்தனர்.
கொச்சிக்கடை பகுதியில் இருந்து தீப்பந்தங்களுடன் மக்கள் புறப்பட்டனர். நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் போராட்டங்களில் கலந்து கொள்வதற்காக கொழும்பு நோக்கி படையெடுத்தனர். கொழும்பு நகருக்குள் நுழையும் அனைத்து வழிகளிலும் குவிக்கப்பட்டிருந்த ராணுவத்தினர், போலீசார் போராட்டக்காரர்களை தடுத்தனர். இதில் போலீசார்-போராட்டக்காரர்கள் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பொதுமக்களை விரட்டி யடிக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டினர். அப்போது போராட்டக்காரர்கள் டயர் களை கொளுத்தி தீவைத் தனர். இதுபோன்று பல இடங்களில் தள்ளு முள்ளு, தீவைப்பு சம்பவங்கள் நடந்தன. இதனால் பெரும் பதற்றம் நிலவியது.
இன்று காலையும் கொழும்பை நோக்கி மக்கள் படையெடுத்த வண்ணம் இருந்தனர். பதுளை பகுதியில் இருந்து பேரணியாக மக்கள் சென்றனர். அதேபோல் பலர் லாரி உள்ளிட்ட வாகனங்களில் வந்தனர். கொழும்புக்கு செல்லும் ரெயில்களில் இளைஞர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
நூற்றுக்கணக்கானோர் 40 அடி நீளமுள்ள கண்டெய்னர் லாரியில் போராட்ட பகுதியை நோக்கி சென்றனர். போராட்டத்தில் பங்கேற்க ஆயிரக்கணக்கானோர் தடையை மீறி கொழும்புக்கு திரண்டு வந்ததால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
ஆனால் கொழும்புக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை அருகே முன்னேறி சென்றனர். அங்கு தடுப்பு வேலிகளை அமைத்து ராணுவத்தினர், போலீசார் அரணாக நின்றனர்.
தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது அதிகாரப்பூர்வ மாளிகையைவிட்டு தப்பியோடியுள்ளார். அவர் நேற்று இரவே ராணுவ தலைமையகத்திற்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
- அதிபர் மாளிகை அருகே இன்று பொதுமக்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டம்.
- ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை என போலீசார் எச்சரிக்கை.
கொழும்பு:
பொருளாதார நெருக்கடி, வறட்சி, எரிபொருள் பற்றாக்குறை, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு என நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த நிலையில், இலங்கை அரசை கண்டித்தும், நாட்டின் பொருளாதார சிக்கலுக்குத் தீர்வு காண தவறிய அதிபர் கோத்தபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலக வலியுறுத்தியும் தலைநகர் கொழும்பில் பொதுமக்கள் இன்று பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். அதிபர் மாளிகை அருகில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளதால், வன்முறை வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து நீர்கொழும்பு, களனி, நுகேகொட, கல்கிசை, கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.
அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவின்பேரில் நேற்று இரவு 9 மணி முதல் இந்த ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும். ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பகுதிகளின் வழியே பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.






