என் மலர்tooltip icon

    உலகம்

    பி.எஸ்.எல்.வி.-சி62 தோல்வியுற்றாலும் உயிர் பெற்ற ஸ்பெயின் செயற்கைக்கோள்!
    X

    பி.எஸ்.எல்.வி.-சி62 தோல்வியுற்றாலும் உயிர் பெற்ற ஸ்பெயின் செயற்கைக்கோள்!

    • ராக்கெட் பாதை மாறி சென்றதால் இலக்கை அடைய முடியவில்லை.
    • பி.எஸ்.எல்.வி-சி62 ராக்கெட்டில் இருந்து பிரிந்து இயங்கி தரவுகளை அனுப்பியுள்ளது.

    பி.எஸ்.எல்.வி-சி62 ராக்கெட்டை கடந்த 12-ந்தேதி இஸ்ரோ விண்ணில் ஏவியது. இதில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) உருவாக்கிய இ.ஓ.எஸ்-என்-1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

    மேலும், அந்த ராக்கெட்டுடன் ஸ்பானிஷ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய சோதனை கருவி மற்றும் 16 சிறிய செயற்கைக் கோள்களும் இணைக்கப்பட்டு ஏவப்பட்டது. ஆனால் ராக்கெட் பாதை மாறி சென்றதால் இலக்கை அடைய முடியவில்லை. இதனால் இத்திட்டம் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் திடீர் திருப்பமாக பி.எஸ்.எல்.வி-சி62 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட ஒரு சிறிய செயற்கைக்கோள் செயல்பட தொடங்கியது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஆர்பிட்டல் பாராடிகம் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர் என்ற சிறிய செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி-சி62 ராக்கெட்டில் விண்ணுக்கு அனுப்பி இருந்தது.

    இதற்கிடையே அந்த சிறிய செயற்கைக்கோள் தரவுகளை அனுப்பியதாக ஆர்பிட்டல் பாராடிகம் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    இதுதொடர்பாக அந்நிறுவனம் தனது எக்ஸ் வலை தள பக்கத்தில் கூறும்போது,"எதிர்பாராத அனைத்து தடைகளையும் மீறி, எங்கள் சிறிய விண்கலம் கேப்சூல் பி.எஸ்.எல்.வி-சி62 ராக்கெட்டில் இருந்து பிரிந்து இயங்கி தரவுகளை அனுப்பியுள்ளது.

    நாங்கள் அதன் பயணப் பாதையை மீண்டும் உருவாக்குகிறோம். முழு அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்து உள்ளது.

    Next Story
    ×