என் மலர்tooltip icon

    உலகம்

    இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் பதவியேற்பு.. வரிக் குறைப்பு குறித்து டிரம்ப் பேச்சு
    X

    இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் பதவியேற்பு.. வரிக் குறைப்பு குறித்து டிரம்ப் பேச்சு

    • பிரதமர் மோடியுடன் எங்களுக்கு ஒரு அற்புதமான உறவு இருக்கிறது.
    • இப்போது அவர்கள் ரஷிய எண்ணெயைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர்.

    இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக நியமனான செர்ஜியோ கோர் பதவியேற்பு விழா அதிபர் டிரம்ப் முன்னிலையில் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.

    இதன்போது பேசிய டிரம்ப், அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவு முக்கியமானது. இந்தியா உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்று. மேலும், உலகின் மிகப்பெரிய நாடு. இந்தியா மிக வேகமாக வளரும் நடுத்தர வர்க்கத்தையும் கொண்டுள்ளது. பிரதமர் மோடியுடன் எங்களுக்கு ஒரு அற்புதமான உறவு இருக்கிறது.

    ரஷிய எண்ணெய் காரணமாக இந்தியா மீதான நமது வரிகள்மிக அதிகமாக உள்ளன. இப்போது அவர்கள் ரஷிய எண்ணெயைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர். அது மிகவும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. எனவே நாங்கள் வரிகளை குறைக்கப் போகிறோம். எதோ ஒரு கட்டத்தில் நாங்கள் அவற்றைக் குறைப்போம்" என்று கூறினார். மேலும் இந்தியா-அமெரிக்கா இடையே எல்லோருக்கும் பயனளிக்கக்கூடிய ஒரு வரி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிக அருகாமையில் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

    முன்னதாக ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக இந்திய பொருட்கள் மீது அபராதமாக அமெரிக்காவால் 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×