என் மலர்
உலகம்

பிரதமரை தொடர்ந்து பாகிஸ்தான் ஜனாதிபதி சீனாவுக்கு 10 நாள் பயணம் - உற்சாக வரவேற்பு
- ஷாங்காய் உச்சிமாநாடு மற்றும் 2 ஆம் உலகப்போர் நினைவு அணிவகுப்பில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்து கொண்டார்.
- சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி 10 நாள் பயணமாக நேற்று சீனா சென்றார்.
செச்சுவான் மாகாணத்தின் செங்டு நகரத்தில் விமானத்தில் வந்திறங்கிய அவரை சீன இணை வெளியுறவு அமைச்சர் சுன் வெயிடோங் அவரை வரவேற்றார்.
வரும் 21 ஆம் தேதி வரை அங்கிருக்கும் அவர், 2025 கோல்டன் பாண்டா சர்வதேச கலாச்சார மன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.
செச்சுவான், ஷாங்காய், சின்ஜியாங் உகோர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அவர் விஜயம் செய்வார்.
இந்த பயணத்திபோது சீன உயர்மட்ட தலைவர்களுடன் பாகிஸ்தான் - சீனா உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்.
முன்னதாக சீனாவில் நடந்த ஷாங்காய் உச்சிமாநாடு மற்றும் 2 ஆம் உலகப்போர் நினைவு அணிவகுப்பில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்து கொண்டார்.
சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ கடந்த ஆகஸ்ட் 20 முதல் 22 ஆகிய 2 நாட்கள் பாகிஸ்தானுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.






