என் மலர்tooltip icon

    உலகம்

    காசாவுக்கு படைகளை அனுப்பும் பாகிஸ்தான் ராணுவம்.. ஏன் தெரியுமா?
    X

    காசாவுக்கு படைகளை அனுப்பும் பாகிஸ்தான் ராணுவம்.. ஏன் தெரியுமா?

    • மொசாட் மற்றும் அமெரிக்க சிஐஏவின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்தார்.
    • ஹமாஸை நிராயுதபாணியாக்குவதிலும் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் இந்த இராணுவம் முக்கிய பங்கு வகிக்கும்.

    காசாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச அமைதி ஒப்பந்தம் மூலம் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

    இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அமைதியை உறுதி செய்ய சர்வதேச படை உருவாக்கப்பட்டு காசாவில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த சர்வதேச படையில் இணைய பாகிஸ்தான் தங்களின் ராணுவ வீரர்களை அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சமீபத்தில், எகிப்தில், பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் இஸ்ரேலிய உளவுத்துறை நிறுவனமான மொசாட் மற்றும் அமெரிக்க சிஐஏவின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்தார். இதன்போது இதற்கான முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் சுமார் 20,000 வீரர்களை காசாவிற்கு அனுப்பும். காசாவில் பாதுகாப்பைக் கண்காணித்தல், மனிதாபிமான உதவிகளை வழங்குதல் மற்றும் மறுகட்டமைப்பு திட்டங்களில் பங்கேற்பது இந்தப் படைகளின் பொறுப்பாகும்.

    மேலும் ஹமாஸை நிராயுதபாணியாக்குவதிலும் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் இந்த இராணுவம் முக்கிய பங்கு வகிக்கும்.

    இந்த படையில் இடம்பெறுவதற்கு ஈடாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடமிருந்து பாகிஸ்தானுக்கு பெரும் நிதி ஊக்கத்தொகையாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×