என் மலர்tooltip icon

    உலகம்

    உக்ரைன் போரில் புது ட்விஸ்ட்.. ரஷியாவுக்காக சண்டையிட்ட சீன வீரர்கள் சிறைபிடிப்பு - ஜெலன்ஸ்கி
    X

    உக்ரைன் போரில் புது ட்விஸ்ட்.. "ரஷியாவுக்காக சண்டையிட்ட சீன வீரர்கள் சிறைபிடிப்பு" - ஜெலன்ஸ்கி

    • இதுதொடர்பாக சீனாவை தொடர்புகொள்ள உக்ரைன் வெளியுறவு அமைச்சரை நான் அறிவுறுத்தியுள்ளேன்
    • சீனா- அமெரிக்கா இடையிலான வர்த்தக போர் தீவிரமடைந்து வருகிறது.

    ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரில் ரஷியாவுக்கு ஆதரவாக பங்கேற்க வடகொரியா தனது ராணுவ வீரர்களை அனுப்பியதாக உக்ரைன் குற்றம்சாட்டி வருகிறது. அதற்கு ஆதாரமாக சில வீடியோக்களும் வெளியாகின.

    இந்த நிலையில் போரில் 2 சீன வீரர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது, "ரஷிய ராணுவத்தில் இணைந்து சண்டையிட்ட 2 சீன குடிமக்களை எங்கள் ராணுவம் பிடித்தது. அவர்கள் உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் சிறைபிடிக்கப்பட்டனர்.

    இந்த கைதிகளின் ஆவணங்கள், வங்கி அட்டைகள் மற்றும் தனிப்பட்ட தரவுகள் எங்களிடம் உள்ளன. இதுதொடர்பாக சீனாவை தொடர்புகொள்ள உக்ரைன் வெளியுறவு அமைச்சரை நான் அறிவுறுத்தியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

    ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரப்படுத்தி உள்ள நிலையில் தற்போது சீன வீரர்கள் ரஷிய போரில் பிடிபட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சீனா- அமெரிக்கா இடையிலான வர்த்தக போர் தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×