அமைதிக்கான நோபல் பரிசு வாங்கும் முழு தகுதியும் அவருக்கு இருக்கு.. டிரம்புக்கு நேதன்யாகு வக்காலத்து!

8-வது போருக்கு நாங்கள் தீர்வு காண நெருங்கிவிட்டோம்.அதை எனக்குக் கொடுக்காததற்கு ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பார்கள்
அமைதிக்கான நோபல் பரிசு வாங்கும் முழு தகுதியும் அவருக்கு இருக்கு.. டிரம்புக்கு நேதன்யாகு வக்காலத்து!
Published on

இந்தியா- பாகிஸ்தான் போர் உள்பட 7 போர்களை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். இதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

அவருக்கு சில நாடுகளும் ஆதரவு தெரிவித்து பரிந்துரைத்தன. ஆனால் அவருக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே டிரம்ப்பின் முயற்சியால் இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்தநிலையில் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்க உள்ள நிலையில் அதுகுறித்து டிரம்ப்பிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர்.

இதற்கு பதிலளித்த டிரம்ப்,"நாங்கள் 7 போர்களை தீர்த்து வைத்தோம். 8-வது போருக்கு நாங்கள் தீர்வு காண நெருங்கிவிட்டோம்.

வரலாற்றில் யாரும் இவ்வளவு போர்களை தீர்த்து வைத்ததாக நான் நினைக்கவில்லை. ஆனால் ஒருவேளை அவர்கள் (நோபல் குழு) அதை எனக்குக் கொடுக்காததற்கு ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பார்கள்" என்றார்.

இதற்கிடையே வெள்ளை மாளிகை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் டிரம்ப்பின் படத்தை "அமைதித் தலைவர்" என்ற தலைப்பில் பகிர்ந்து உள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவின் அலுவலகம் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், டொனால்டு டிரம்புக்கு நோபல் பரிசு கொடுங்கள்.அவர் அதற்கு முழு தகுதி படைத்தவர்" என்று தெரிவித்துள்ளது.

இன்று மாலை அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ள நிலையில் நேதன்யாகுவின் கருத்து வந்துள்ளது.  கடந்த ஜூலை மாதம் இஸ்ரேல் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க அதிகாரபூர்வமாக பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com